பேச்சுவார்த்தைகளின் ஊடாக தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வினை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய சூழலை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும் - சாணக்கியன்

Published By: Digital Desk 7

01 Aug, 2024 | 01:28 PM
image

பேச்சுவார்த்தைகளின் ஊடாக தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய சூழலை நாங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

ஒரு சிலர் இந்த தமிழ் பொது வேட்பாளரை வைத்துக்கொண்டு தங்களுடைய பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து தங்களுடைய கட்சி பிரபல்யமாகலாம் என ஒரு சிலர் இருக்கின்றார்கள் இன்னும் ஒரு சிலர் இதை பணம் உழைக்கும் ஒரு சந்தர்ப்பமாக பார்க்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் புனரமைக்கப்பட்ட ஆலயங்களுக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்  அவற்றினை பார்வையிட்டார்.

மட்டக்களப்பு கல்லடி பகுதியில் உள்ள ஆலயங்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் புனரமைக்கப்பட்ட ஆலயங்களுக்கு சென்று புனரமைப்பு வேலைகளை பார்வையிட்டார்.

அத்துடன் குறித்த பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு சாணக்கியனின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் கொள்வனவுசெய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

மிக விரைவாக ஒரு ஆட்சி மாற்றம் நடைபெற இருக்கின்றது ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கின்றது எவர் ஜனாதிபதியாக வந்தாலும் இந்த மாவட்டத்தில் இருக்கும் நிலைமைகள் மாற வேண்டும் அதாவது தற்போது இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஊழல் மோசடி செய்கின்றவர்களை அகற்றி வரும் காலங்களில் மக்கள் சுத்தமான கரங்கள் உள்ள மக்களுடன் சேர்ந்து மக்களும் தேவையை பூர்த்தி செய்யக் கூடியவர்களை நாங்கள் தெரிவு செய்ய வேண்டும்.

தற்போது தெற்கிலே பார்த்தால் நேற்றைய தினம் ஒரு புதிய விடயம் நாங்கள் பல காலமாக எதிர்பார்த்த விடயம் அதாவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்காலத்தில் அவர்கள் மனதில் வைத்திருக்கும் அதாவது மொட்டு என்கின்ற காட்சி மக்களுக்கான கட்சி அல்ல சிங்கள மக்களுக்கும் இல்லை தமிழ் மக்களுக்கும் இல்லை இலங்கையில் வாழும் எவருக்கு இல்லை மொட்டு என்பது வெறுமனே ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஒரு சொத்து நான் பல இடங்களில் கூறியிருக்கின்றேன்.

அதை நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு உறுதிப்படுத்துகிறது அவர்களது தேவை அடுத்த கட்டம் நாமல் ராஜபக்சே என்கின்ற தங்களுடைய குடும்ப வாரிசின் உடைய அரசியல் எதிர்காலம் அந்த குடும்ப வாரிசினுடைய அரசியலை உறுதிப்படுத்துவதற்காக தாங்கள் பொதுஜன பெரமுன கட்சி ஒரு வேட்பாளரை களம் இறக்கப் போவதாக செய்தி வெளிவந்திருக்கின்றது.

அவர்களுடைய வெற்றி வாய்ப்பு எவ்வாறு இருக்கும் பொது ஜன பெரமுன கட்சியினுடைய வேட்பாளர் யார் என தற்போது வரை தெரியாது ஆனால் பொதுஜன பெரமுன என்கின்ற கட்சி இரண்டு வருடங்களுக்கு முன்புதான் ஒட்டுமொத்த ராஜாங்க அமைச்சர்கள் ராஜினாமா செய்து நிதி அமைச்சர் ராஜினாமா செய்து பிரதமர்  ராஜினாமா செய்து அந்த கட்சியினூடாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நாட்டை விட்டு அகதியாக தப்பிச் செல்கின்ற நிலைமைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட ஒரு கட்சி.

அந்தக் கட்சி புதிதாக வந்து ஒரு புது வேட்பாளரை களம் இறக்குவார்கள் ஆயின் மக்கள் அந்த கட்சியினுடைய கடந்த கால செயற்பாடுகளை நாட்டினை வங்குரோத்து நிலைமைக்கு பங்கு வகித்த அவர்களுக்கு அந்த வகையில் மக்கள் சிந்தித்து செயல்படுவார்கள்.

இந்த சந்தர்ப்பம் தமிழ் மக்களுக்கு இன்னமும் மேலதிகமான வாய்ப்புகளை இந்த காலத்தில் உருவாக்கி இருக்கின்றது அதாவது ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு மொட்டு கட்சியினுடைய ஆதரவு இனி இல்லை என்பதனை பகிரங்கமாக கூறியிருக்கின்றார் என்றால் இனி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தனக்கான ஆதரவு தளத்தை அதிகரிப்பதற்காக இனி நிச்சயமாக தமிழ் மக்களின் வாக்கு அதிகமாக தேவை என உணர்ந்திருப்பார்.

அதே போன்று தான் கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவுடன் மொட்டுக் கட்சியை சேர்ந்த 100 பேர் இருக்கின்ற போது நாங்கள் எந்த காரணத்தை கொண்டும் ரணில் விக்கிரமசிங்க பக்கம் திரும்பி பார்க்காத தமிழ் மக்கள் இன்றும் பிள்ளையான் டக்ளஸ் போன்றவர்கள் கொலை குற்றச்சாட்டு கொண்டவர்கள் அவருக்கு பக்கத்தில் அவருடைய மடியில் இருக்கும் வரைக்கும் தமிழ் மக்கள் அந்த பக்கத்தை இன்னமும் எட்டிப் பார்க்க மாட்டார்கள் ஆனால் ராஜபக்ஷ குடும்பத்தினர் இல்லாமல் சென்று விட்டார்களாமே இனி இந்த கோஷ்டி மாத்திரம் தான் இருக்கின்றதாமே என்று பேசுகின்ற அளவிற்கு இன்று வந்திருக்கின்றது.

அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தி போன்ற காட்சிகள் இன்னமும் தமிழ் மக்களுடைய வாக்குகள் தேவை என்று அவர்களுக்கும் தமிழ் மக்களின் வாக்கு தேவை அதிகரித்து இருக்கின்றது. இவை இரண்டையும் பார்க்கின்ற போது அனுரகுமார திசாநாயக்கவினுடைய கட்சியும் தமிழ் மக்களின் வாக்கு இந்த இரு கட்சிகளுக்கும் சென்று விடுமோ என்கின்ற அச்சம் ஏற்பட்டு இருக்கின்றது.

அதைப் போன்று இன்னும் பல கோமாளிகள் போட்டியிடுவதாக பார்க்கக் கூடியதாக இருக்கின்றது இன்று உள்ளூராட்சி சபை தேர்தல்களில் வட்டாரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை போன்று ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் காணப்படுகின்றன ஜனாதிபதி தேர்தலை யார் கேட்க வேண்டும் என்கின்றதற்கான வரைவிலக்கணம் கூட இல்லாத நிலைக்கு இன்று வேடிக்கையான நிலைக்கு இந்த நாட்டின் நிலைமை காணப்படுகின்றது.

இன்று தமிழ் மக்களுக்கு இந்த ஜனாதிபதி தேர்தலை வைத்து பேரம் பேசக்கூடிய சந்தர்ப்பத்தை நேற்றைய தினம் இந்த மொட்டு கட்சியினுடைய ஜனாதிபதி வேட்பாளரை களம் இறங்குகிறார்கள் என்கின்ற செய்தி இன்னமும் எங்களுக்கு பேரம் பேசும் சக்தியை அதிகரித்திருக்கின்றது.

அண்மையில் யாழ் மாவட்டத்தில் ஒரு நடந்த கருப்பு ஜூலை நினைவேந்தல் கூட்டத்தில் கூறிய விடயம் நாங்கள் இன்று சஜித் பிரேமதாசர 13-வது திருத்தச் சட்டம் 13+, 13- என்கின்ற தீர்வை கூறுகின்றார் அவரிடமும் தமக்கு சமஸ்டி தான் தேவை என்று அவரிடமும் பேச்சு வார்த்தை நடாத்த வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அவர் இன்னமும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை அவர் வேட்பாளராக அறிவித்ததன் பிற்பாடுதான் நாங்கள் அவருடன் வேட்பாளர் என்கின்ற ரீதியில் பேரம் பேசலாம் இன்று நாட்டினுடைய ஜனாதிபதியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் அந்த வகையில் அனுரகுமார திசாநாயக்கவுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் தம்மிக்க பெரேரா இது மொட்ட கட்சியில் இவர் வேட்பாளராக வருகின்றாரோ அவரோடும் பேச்சு வார்த்தையில் ஈடுபட தான் வேண்டும்.

இந்த பேச்சுவார்த்தைகளின் ஊடாக தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை பெறுவதற்காக வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய சூழலை நாங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

அத்தோடு தான் அரசியல் தீர்வு மாத்திரமல்ல மாவட்டத்தை பொறுத்த அளவில் மாவட்டத்தில் காணப்படும் குளறுபடியான நிலைமைகளுக்கு நாங்கள் ஒரு எங்களோடு சேர்ந்து செல்லக்கூடிய ஒரு ஆட்சியை உருவாக்குமாக இருந்தால் மாவட்டங்களுக்குள் காணப்படும் குளறுபடிகளை நாங்கள் நிறுத்தலாம்.

உதாரணமாக மதுபான சாலைகளை சட்ட விரோதமாக நிறுவுகின்றார்கள் என்றால் மாவட்ட நிர்வாகம் நமக்கு இருக்குமாக இருந்தால் எங்களுக்கு சார்பான அரசாங்கம் இருக்குமாக இருந்தால் நாங்கள் அவ்வாறான விடயங்களை தடுக்கலாம்.

தமிழ் பொது வேட்பாளர் விடையும் தொடர்பாக கட்சியாக நாங்கள் இருவித தீரும் எடுக்கவில்லை நாங்கள் இலங்கை தமிழரசு கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை ஆனால் கட்சியாக பொது வேட்பாளர் என்கின்ற விடயத்தை அடுத்தடுத்த மத்திய குழு கூட்டங்களிலே நாங்கள் தீர்மானம் எடுப்போம் என நினைக்கின்றேன்.

உங்களுடைய நிலைப்பாடு என்ன?

மக்களுக்கு சாதகமான சூழல் வந்து பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பம் இது ஏனென்று சொன்னால் சிவில் சமூக அமைப்புக்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் இந்த பொது வேட்பாளர் என்கின்ற விடயத்தை பற்றி சிந்திப்பதை நான் ஒரு காலமும் குறைவு சொல்லவில்லை.

ஏனென்றால் மக்களுக்கும் அதிருப்தி சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் அதிருப்தி நாங்கள் எத்தனை அரசாங்கத்துடன் பேசுவது எத்தனை காலத்திற்கு ஏமாறுவது என்கின்ற வழியில் அவர்கள் செல்லலாம் அது அவர்களது ஜனநாயக உரிமை நாங்கள் அதனை மறக்க முடியாது அவர்களை குறை கூறவும் முடியாது.

ஆனால் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக பொறுப்புள்ள அரசியல் தலைவர்களாக நாங்கள் மக்களுடைய எதிர்காலத்தை கருதி நல்ல விடயங்களை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும்.

பொது வேட்பாளர் என்கின்ற விடயம் ஊடாக எமது மக்களுக்கு உதாரணமாக சர்வதேச நாடு மத்தியஸ்தம் வகித்து அரசாங்கத்துடன் பேசி நாங்கள் சில ஒப்பந்தங்களை செய்யலாம் என்று பல சர்வதேச நாடுகளுடன் பேசிய போது அவர்கள் கூறுகின்றார்கள் ஒப்பந்தம் செய்துவிட்டு இலங்கை அரசாங்கம் செய்யாவிட்டால் நாங்கள் ராணுவத்தை கொண்டு வந்து அவர்களை கட்டுப்படுத்தலாமா? என்கின்ற கேள்வி எங்களிடம் கேட்கின்றார்கள்.

அவ்வாறான ஒரு நிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட விடயம் தொடர்பாக சில அரசியல்வாதிகள் அவதானமாக இருக்க வேண்டும் மக்கள் ஒரு சிலர் இந்த பொது வேட்பாளரை வைத்துக்கொண்டு தங்களுடைய பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து தங்களுடைய கட்சி பிரபல்யமாகலாம் என ஒரு சிலர் இருக்கின்றார்கள் இன்னும் ஒரு சிலர் இதை பணம் உழைக்கும் ஒரு சந்தர்ப்பமாக பார்க்கின்றார்கள் இன்னும் ஒரு சிலர் அவர்களுக்கு என்ன தேவை என்றே தெரியாது ஒரு நாள் கூறுகின்றார்கள் ஜனாதிபதியினுடைய காலத்தை நீடிக்க வேண்டுமென்று இன்னும் ஒரு நாள் கூறுகின்றார்கள் இந்த ஜனாதிபதி இல்லாமல் இன்னும் ஒரு நல்ல ஜனாதிபதி வேண்டும் என்கின்றார்கள் இன்னும் ஒரு நாள் கூறுகின்றார்கள் பொது வேட்பாளர் என்கின்றார்கள் இதில் இரண்டாவது வாக்கை பயன்படுத்த வேண்டும் என்கின்றார்கள் என்ன நடப்பது என்பது ஒரு சுய சிந்தனை செய்யக்கூடிய அளவிற்கு மனநிலை இல்லாதவர்களும் இந்த கைச்சாற்றில் இருக்கின்றார்களா என்கின்ற சந்தேகம் இருக்கின்றது.

தற்போது பல காட்சிகள் உடைந்து காணப்படுகின்றது மொத்த கட்சியில் ஏற்படுகின்ற பிரச்சனை தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன.?

அதை நான் எவ்வாறு கூறுவது அதைப் பற்றி அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தான் கூற வேண்டும் இந்த மாவட்டத்திலும் வியாழேந்திரன் என்கின்ற அமைச்சர் இருக்கிறார் ராஜாங்க அமைச்சர் அவர் மொட்டு கட்சியில் தான் தேர்தல் போட்டியிட்டார் அவர் மொத்த கட்சியின் உடைய மாவட்ட அமைப்பாளர் என்கின்ற பதவியையும் வைத்திருந்தவர்.

லொகான் ரத்வத்த என்கின்ற அமைச்சர் வவுனியாவில் சிறைச்சாலையில் வைத்து எமது தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கியை வாயில் வைத்து சப்பாத்தை நக்க வைத்த நேரம் இச்சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின்னர் மட்டக்களப்பிற்கே வருகை தந்த போது இவர் சென்று அவரை வரவேற்று மட்டக்களப்பில் மேடை போட்டு அவருக்கு பக்கத்தில் இருந்து அழகு பார்த்தவர்தான் அவர்.

அவரை தேடிப்பிடித்து மொட்டு கட்சியை பற்றி அவரிடம் கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும். பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கல்லடியில் உள்ள விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்ததுடன் அவரது பன்முகப்படுத்த நிதியில் ஆலயத்திற்கு வழங்கப்பட்டு அதன் கட்டுமான பணிகள் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன் போது ஆலய கட்டுமான பணிகளை பார்வையிட்டு மேலதிக தேவைகள் தொடர்பாக கலந்துரையாடியதன் பிற்பாடு விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்களை கழக உறுப்பினர்களிடம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04