இலங்கையில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் 'அரச ஓய்வூதியம்' வழங்கி உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணமொன்றை வவுனியாவைச் சேர்ந்த இளைஞனொருவன் முன்னெடுத்துள்ளார்.

குறித்த சைக்கிள் பயணம் கடந்த 8 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு வவுனியா ஸ்ரீகந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகியது.


வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் ஆன்மிக வழிபாடுகளை மேற்கொண்டு ஆலய வளாகத்தில் ஒன்று கூடிய வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களாக  செ.மயுரன், ஜீ.ரி லிங்கநாதன், தியாகராஜா , புளொட் முக்கியஸ்தரும் முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திருக.சந்திரகுலசிங்கம் (மோகன்) , தமிழ்விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) , சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராசலிங்கம், அரச,அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டதுடன் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கொடியினை அசைத்து சைக்கிள் பயணத்தினை ஆரம்பித்து வைத்தார்.

கடந்த சனிக்கிழமை கிளிநொச்சியை நோக்கி சைக்கிள் பயணம் ஆரம்பமாகியது. சுமார் 11 நாட்கள் சை இலங்கையைச் சுற்றி சைக்கிளில் பயணிக்கவுள்ள இவர் 1515 கிலோமீற்றர் தூரத்தினை துவிச்சக்கரவண்டியில் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.