எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நேற்று புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அறிவித்துள்ளது.
அமைச்சர் நிமால் சிரிப்பாலடி சில்வா பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகிய வண்ண மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் தலைமையிலான குழு இவ்வாறு ஜனாதிபதியிடம் சுதந்திர கட்சியின் ஆதரவை தெரிவித்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் தனக்கு ஆதரவளிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளருக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு நேற்று முற்பகல் கூடிய சுதந்திர கட்சியின் அரசியல் குழு மற்றும் செயற்குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
குறித்த தீர்மானம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அரசியல் குழு நேற்று மாலை 6:30 மணி அளவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வை சந்தித்து நீண்ட கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தது. இதன் போது சில கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர் . அவை தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய தமது ஆதரவை அவருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM