ஆண்டிறுதிக்குள் 2 பில்லியன் டொலர் முதலீட்டை ஈர்ப்பதே இலக்கு - திலும் அமுனுகம

Published By: Vishnu

31 Jul, 2024 | 05:53 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் 35 முதலீட்டு வேலைத்திட்டங்களுக்காக 800 மில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இவ்வாண்டில் எமது இலக்கு ஒரு பில்லியன் டொலர் என்ற போதிலும், 2 பில்லியன் டொலர் வரை முதலீடுகளை ஈர்க்க முடியும் என வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் 800 மில்லியன் டொலர் பெறுமதியான 35 முதலீட்டு வேலைத்திட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். இவ்வாண்டில் எமக்கு வழங்கப்பட்டுள்ள இலக்கு ஒரு பில்லியன் டொலர் ஆகும். எனினும் தற்போது நாம் 800 மில்லியன் டொலரை எட்டியுள்ளதால் ஆண்டிறுதிக்குள் 2 பில்லியன் டொலர் பெறுமதியான முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.

திருகோணமலை, காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் உள்ளிட்ட பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு கனேடிய முதலீட்டாளர்களுடன் இணைந்து அரச - தனியார் கூட்டு முயற்சியில் 4 கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு காங்கேசன்துறையில் சுதந்திர வர்த்தக வலயத்தை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் முதலீடுகள் குறைவடையலாம். இது எந்தவொரு நாட்டிலும் தேர்தல் காலங்களில் வழமையாக இடம்பெறுவதாகும். எவ்வாறிருப்பினும் இந்தக் காலப்பகுதியில் முதலீட்டு சபையை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பொருளாதார பரிவர்த்தனை சட்டத்துக்கமைய பொருளாதார ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இதன் பணி பொருளாதாரம் குறித்த பிரசாரங்களை முன்னெடுப்பதாகும். இதற்கான செயற்திட்டங்கள் இலங்கையில் முதலீடு என்ற தொனிப்பொருளின் கீழ் அதன் முகவரகங்களால் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மேலும் நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் ஊடாக வரி அற்ற ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். ஏற்கனவே இது தொடர்பில் வழங்கியுள்ள கோட்டாவை அதிகரிக்குமாறு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். இலங்கைக்கு இலாபம் கிடைக்கும் வகையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19