(எம்.மனோசித்ரா)
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டாம் என இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ள நிலையிலேயே, இந்த நாட்களில் பரபரப்பாகப் பேசப்படும் இளம் எம்.பி. இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ள குறித்த பாராளுமன்ற உறுப்பினர், ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.
எம்.பி.யின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடி அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானம் எடுப்பார் என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் முன்னர் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM