பிரபல எழுத்தாளரும் சமூக சிந்தனையாளருமான சிவசங்கரிக்கு 2024ஆம் ஆண்டுக்கான 'விஸ்வம்பர் வைத்தியர் சி. நாராயண ரெட்டி நினைவு தேசிய இலக்கிய விருது' வழங்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள ரவீந்திரபாரதியில் நடைபெற்ற பிரத்தியேக நிகழ்வொன்றில் சிறப்பு அதிதியாக பங்குபற்றிய மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, எழுத்தாளர் சிவசங்கரிக்கு இந்த விருதை வழங்கி கௌரவித்தார்.
புகழ்பெற்ற தெலுங்கு மொழி கவிஞரும், இலக்கிய சேவை ஆற்றியதற்காக இந்திய அரசு வழங்கும் உயர்ந்த விருதான ஞானபீட விருதினை வென்றவருமான பத்மபூஷன் வைத்தியர் சி. நாராயண ரெட்டியின் 93வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவரது பெயரில் தேசிய அளவிலான இலக்கிய விருதினை சுசிலா நாராயண ரெட்டி அறக்கட்டளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
இந்நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான 'விஸ்வம்பர் வைத்தியர் சி. நாராயண ரெட்டி நினைவு தேசிய இலக்கிய விருது'க்கு எழுத்தாளர் சிவசங்கரி தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு இந்த விருதுடன் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்க பரிசு, பாராட்டு பத்திரம், நினைவுப் பரிசு ஆகியவை வழங்கப்பட்டன.
இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ரவீந்திரபாரதியில் நடைபெற்ற பிரத்தியேக நிகழ்வில் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு அதிதியாக பங்குபற்றினார்.
மேலும், இவருடன் முன்னாள் மக்களவை உறுப்பினர் முரளி மோகன், தொழிலதிபர் 'பத்மபூஷன்' வர பிரசாத் ரெட்டி, முதல்வரின் ஆலோசகர்கள் மற்றும் சி. நாராயண ரெட்டி குடும்பத்தினர், இலக்கியவாதிகள், சி. நாராயண ரெட்டியின் வாசகர்கள், ரசிகர்கள் என பலர் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் சி. நாராயண ரெட்டி எழுதிய 'சமன் விதம்' என்ற நூலும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய எழுத்தாளர் சிவசங்கரி, '' நாராயண ரெட்டி சிறந்த கவிஞர் மற்றும் எழுத்தாளர். வாழ்க்கையை பல கோணங்களில் அணுக வேண்டியதன் அவசியத்தை தன்னுடைய எழுத்துக்களில் வலியுறுத்தியவர். மனித நேயத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர். இலக்கியத்தின் மீது தீரா பற்றும் ஆழ்ந்த மதிப்பினையும் அவர் கொண்டிருந்தார்'' என குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM