அளவுக்கு அதிகமாக உணவு வழங்கியமையால் நாய் உயிரிழப்பு ; உரிமையாளருக்கு சிறை

Published By: Digital Desk 3

31 Jul, 2024 | 01:14 PM
image

நியூசிலாந்தில் அளவுக்கு அதிகமாக உணவு வழங்கியமையால் நாய் ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உரிமையாளரான பெண்ணுக்கு இரண்டு மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நகி (Nuggi) என்ற நாய் 53 கிலோகிராம் எடையும், கடுமையான உடல் பருமனும் கொண்டிருந்தது.

நாய்க்கு அவர் தினமும் சராசரியான உணவை விட 10 இறைச்சி துண்டுகளை அதிகம் கொடுத்து வந்ததனால் அந்நாய்க்கு உடல் எடை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்கம் அதை கண்டறிந்து அந்த நாயை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.  2 மாத சிகிச்சையில் 8.8 கிலோ குறைந்த பின்னரும் கல்லீரல் இரத்த கசிவால் அந்த நாய் இறந்து போனது. அதற்கு அதீத உடல் எடையே காரணமாக கூறப்படுகிறது.

இதனால் மானுகா மாகாணத்தின் நீதிமன்றம் நாயின் உரிமையாளருக்கு 1,222 நியூசிலாந்து டொலர் அபராதமும் இரண்டு மாதங்கள் சிறை தண்டனையும் ஓராண்டு காலத்திற்கு நாய் வளர்க்கும் உரிமையையும் இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

"துரதிஷ்டவசமாக குறைந்த எடையுடைய பிராணிகளே அதிக இன்னல்களுக்கு ஆளாகும். ஆனால் அதற்கு நிகராக அதிக எடை கொண்ட பிராணிகளும் பல இன்னல்க சந்திக்க நேரிடுகிறது என விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்கத்தின் தலைவர் Todd westwood தெரிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவர்களால் நுக்கியின் அதிக எடை காரணமாக அவரது இதயத் துடிப்பைக் கண்டறிய முடியவில்லை. நாய்க்கு நிறைய தோல் வளர்ச்சிகள் இருந்தன, குறிப்பாக அவரது முழங்கைகள் மற்றும் வயிறு போன்ற தொடர்பு பகுதிகளில், மற்றும் அவரது நகங்கள் பெரிதாகி இருந்தது. மேலும், நுகிக்கு விழி வெண்படல அழற்சியும் இருந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு :...

2025-02-08 16:39:16
news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48