நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமான அமைதியான சுற்றுச்சூழலையும் முன்னேற்றத்தையும் பெற்றுக்கொள்ள கடந்த 15 வருடங்களில் செயலாற்றுவதற்கு பதிலாக கடன்களை மீளச்செலுத்த முடியாத வங்குரோத்து நாடாக எமது நாடு மாற்றப்பட்டுள்ளது. நிகழ்காலத்தில் கூட ஜனநாயகத்தை ஒருபுறம் ஒதுக்கித்தள்ளிவிட்டு மேற்கொண்டு வருகின்ற அரசியல், சட்டவிரோதமான செல்வத்தை திரட்டுகின்ற வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளது என ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்த்தா தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற முப்படையினர் கூட்டமைவின் ஊடக சந்திப்பு கடந்த 29 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்த்தா தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்த்தா மேலும் தெரிவிக்கையில்,
நான் இளைப்பாறிய வான்படை உத்தியோகத்தராக முன்னர் முப்பது வருடகால யுத்தத்திற்கு முடிவுகாண்பதற்காக முனைப்பாக பங்களித்த ஒருவனாவேன். எனது சமக்காலத்தவர் அனைவரும் உயர்ந்த அர்ப்பணிப்புடன் உயிரை பணயம் வைத்து தாய் நாட்டு அவசியமான சமாதானத்தை பெற்றுக்கொடுக்க பங்களிப்புச் செய்தார்கள் முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் குடிமக்களை உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோருக்கு உயிர்களை இழக்கச் செய்வித்த பெருந்தொகையான வளங்களை அர்ப்பணித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இயலுமாயிற்று. நாங்கள் அதற்காக உன்னதமான நோக்கத்தை மனதில் வைத்துக்கொண்டே செயலாற்றினோம்.
நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமான அமைதியான சுற்றுச்சூழலையும் முன்னேற்றத்தையும் பெற்றுக்கொள்ள கடந்த 15 வருடங்களில் செயலாற்றுவதற்கு பதிலாக கடன்களை மீளச்செலுத்த முடியாத வங்குரோத்து நாடாக எமது நாடு மாற்றப்பட்டுள்ளது. நிகழ்காலத்தில் கூட ஜனநாயகத்தை ஒருபுறம் ஒதுக்கித்தள்ளிவிட்டு மேற்கொண்டு வருகின்ற அரசியல், சட்டவிரோதமான செல்வத்தை திரட்டுகின்ற வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளது.
நாங்கள் எவருமே அருவருக்கின்ற இந்த அரசியல் முறைமையை மாற்றியமைத்து கௌரவமான அரசியலைப் போன்றே அரசியல்வாதிகளுக்கு நன்மதிப்பினை ஏற்படுத்தக்கூடிய ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். நாங்கள் தற்போது இரண்டு வருடங்களுக்கு மேலாக தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம். எங்களுடைய இரண்டாவது தேசிய மாநாட்டில் பங்கேற்குமாறு இளைப்பாறிய வான்படை அங்கத்தவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM