பொதுமக்கள் கூடும் இடங்களில் டெங்கு பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் !

31 Jul, 2024 | 01:25 PM
image

பொதுமக்கள் கூடும் இடங்களில் டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் நேற்று (30) கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அதன்படி, அரச கட்டிடங்கள், பாடசாலைகள், மேலதிக வகுப்புகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும்  பொதுமக்கள் கூடும் இடங்களில் டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு இடங்களில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கண்டி, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுப்புறச் சூழலை மிகவும் சுத்தமாக வைத்திருக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2026-05-17 14:14:42
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2026-05-17 14:11:04
news-image

நீரில் மூழ்கி நபரொருவர் பலி!

2026-05-17 14:10:33
news-image

அடையாளம் தெரியாத சடலம் கண்டுப்பிடிப்பு!

2026-05-17 13:58:51
news-image

கல்கிஸ்சை பகுதியில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான...

2026-05-17 13:22:18
news-image

நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் பொலிஸ் பதவி...

2026-05-17 12:53:28
news-image

நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா 2026:...

2026-05-17 12:47:10
news-image

இளம் வயதிலேயே சிறுமிகள் கப்பிணிகளாக மாறும்...

2026-05-17 12:35:04
news-image

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகள்...

2026-05-17 12:30:15
news-image

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவில்...

2026-05-17 12:29:33
news-image

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் ஆரம்பம்!

2026-05-17 12:15:25
news-image

எலி காய்ச்சல் மற்றும் இரத்தப் புற்றுநோய்...

2026-05-17 11:54:31