கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் 37வது ஆண்டு ஆடிப்பூர மஹோற்சவத்தை முன்னிட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி புதன்கிழமை பால்குட பவனியும் ஆகஸ்ட் 10ஆம் திகதி சனிக்கிழமை பஞ்சரத பவனியும் நடைபெறவுள்ளது.
ஆலயத்தில் கடந்த ஜூலை 20ஆம் திகதி மஹா கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்தோடு ஆடிப்பூர மஹோற்சவம் ஆரம்பமானது.
அதை தொடர்ந்து, ஜூலை 21ஆம் திகதி இலட்சார்ச்சனை ஹோமம் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 7ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆடிப்பூர பால்குட பவனி ஆரம்பமாகும்.
ஆகஸ்ட் 9ஆம் திகதி இலட்சார்ச்சனை நிறைவுபெறும். அதை தொடர்ந்து, மறுநாள் 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு மயூரபதி அம்மன் ஆலயத்திலிருந்து பஞ்ச ரத பவனி ஆரம்பமாகும்.
ஆகஸ்ட் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சமுத்திர தீர்த்தோற்சவம் நடைபெறும். அதையடுத்து, பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் மும்மூர்த்திகள் எழுந்தருளல் இடம்பெற்று, பின்னர் ஆலய வளாகத்தில் அன்னதானம் வழங்கப்படும்.
அன்றைய தினம் மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாடு, 5.30 மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து, 6 மணிக்கு மும்மூர்த்திகள் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா ஆரம்பமாகும்.
இந்திர விமானம் காலி வீதி, உருத்திரா மாவத்தை, ஹம்டன் வீதி, W. A. சில்வா மாவத்தை, பீட்டர்சன் வீதி, பரகும்பா பிளேஸ், சுவிசுத்தாராம வீதி, ஹவ்லொக் வீதி வழியாக மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலை சென்றடையும்.
அதன் பின்னர், வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து கொடியிறக்கம் இடம்பெறும்.
மறுநாள் 12ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு பூங்காவனம் உற்சவம் நடைபெறும்.
ஆகஸ்ட் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு வரலட்சுமி, சுமங்கலி, திருவிளக்கு பூஜை நடைபெறும்.
ஆகஸ்ட் 19ஆம் திகதி திங்கட்கிழமை பௌர்ணமி திருவிளக்கு பூஜையை தொடர்ந்து, மறுநாள் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு வைரவர் மடையோடு ஆடிப்பூர மஹோற்சவம் நிறைவடையும்.
மேலும், மஹோற்சவ காலத்தில் தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM