ஹிக்கடுவை பிரதேசத்தில் தந்தையொருவர் தனது 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் அருந்தியதன் காரணமாக கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

42 வயதான குறித்த தந்தை தமது 7 வயதான ஆண் பிள்ளையொருவருக்கும் மேலும் 9 வயதான இரட்டை ஆண் பிள்ளைகளுக்குமே நேற்று முன்தினம் இவ்வாறு விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிள்ளைகளின் தாய் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சென்றுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கு தந்தை அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அவர்களுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவர், இவ்வாறு தனது பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் அருந்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.