(எம்.ஆர்.எம்.வஸீம்)
அரசாங்கத்திடம் முறையான பொருளாதார கொள்கை இல்லாதமை காரணமாக புத்தாண்டை சந்தோசமாக கொண்டாட முடியாத நிலைக்கு சாதாரண மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் கூட்டு எதிர்க்கட்சி அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கு எதிரான பிரசாரத்தை முன்னிலைப்படுத்தி நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க முயற்சிக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.
மேலும் அரசாங்கத்திடம் முறையான பொருளாதார கொள்கையொன்று இல்லாமையே இந்த நிலைக்கு காரணமாகும். அத்துடன பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக அதிகாரத்துக்கு வந்த அரசாங்கம் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு குறை கூறிவருகின்றதே தவிர பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எந்த வேலைத்தட்டத்தையும் இதுவரை மேற்கொள்ள வில்லை.அத்துடன் அரசாங்கத்தின் பொருளாதார திட்டம் தொடர்பான சட்டமூலமும் இதுவரை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவில்லை.
எனவே நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதை கூட்டு எதிர்க்கட்சி பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பிரவினை வாதத்துக்கு எதிராக குரல் கொடுப்பதை விட அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கு எதிரான பிரசாரத்தை முன்னிலைப்படுத்தி நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க முயற்சிக்கவேண்டும் என்றார்.
சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM