(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 92 உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் செவ்வாய் கிழமை (30) ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்ட ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணை குறித்த ஆளுங்கட்சி குழு கூட்டத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் முன்வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்களும் அறிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபையில் கட்சியின் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கு ஆதரவாக வாக்களித்த எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை எனவும், இக்கூட்டத்தில் அவர்களால் பங்கேற்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
இந்த சந்திப்பில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் கலந்து கொண்டமை குறிப்பிட்டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM