செவ்ரோன் லுப்ரிகண்டஸ் லங்கா பிஎல்சி (CLLP) இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடம் (SLRCS) 35,000 அமெரிக்க டொலர்களை வெள்ளநிவாரணமாக அளிக்கும் முன்னெடுப்பை இன்று அறிவித்தது. குறிப்பாக 2024 ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விளைந்த அழிவுகளை ஈடுகட்டும் வகையில் கொழும்பு, காலி, மாத்தறை மாவட்டங்களிலுள்ள 1,500 கிணறுகளை சுத்தம் செய்வதற்காக இந்நிதி அளிக்கப்படுகிறது.
வெள்ளத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு (அண்ணளவாக 7500 தனிநபர்களுக்கு) நன்மை பயக்கவுள்ளது. சிறுவர்கள், வயோதிபர்கள், மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள தனிநபர்கள் உள்ளிட்ட மிக நலிவடைந்த மக்களுக்கு இதன்போது முன்னுரிமை வழங்கப்படும்.
கிணற்றை சுத்தம் செய்யும் இச்செயற்றிட்டத்தின் பிரதான நோக்கமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுக்காப்பானதும் சுத்தமானதுமான குடிநீரை அவர்கள் மீண்டும் அணுகக்கூடியா வழிவகைகளை உருவாக்கி அதன் மூலம், நீரினால் பரவக்கூடிய வியாதிகளை தடுத்து பொதுமக்கள் சுகாதாரத்தை ஊக்குவிப்பதே ஆகும்.
கிணறு சுத்தம் செய்யும் செயற்றிட்டம் ஜூலை 2024 இல் துவங்கி செப்டம்பர் 2024 இல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (SLRCS) பயிற்றப்பட்ட தன்னார்வலர்களையும் பணியாளர்களையும் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தி, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து செயற்பட ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டம் துல்லியமாக சுகாதார நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு அமர்வுகளையும், பயனாளிகளுக்கு சுத்திகரிப்புப் பொதிகள் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு வில்லைகள் விநியோகித்தல் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
இடமிருந்து வலமாக
குமாரி கொத்தலாவல - இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளை அபிவிருத்தி பணிப்பாளர்
ஜகத் அபேசிங்க - இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர்
கலாநிதி. மஹீஷ் குணசேகர - இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் பணிப்பாளர் நாயகம்
பேர்ட்ரம் போல் - செவ்ரோன் லூப்ரிகண்ட்ஸ் லங்கா பிஎல்சியின் நிர்வாகப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி
டெஹான் சமரசிங்க - செவ்ரோன் லூப்ரிகண்ட்ஸ் லங்கா பிஎல்சியின் சந்தைப்படுத்தல் தலைவர்
கலாநிதி சித்தார்த்த நாணயக்கார - இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM