உலகின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான Tata Motors, தனது அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனத்துடன் இணைந்து, பல்துறை பயன்பாடு கொண்ட, நம்பகமான Pick-up வாகனங்களுக்கான சந்தையில் அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், புதிய Tata Xenon Yodha வினை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு வலுவான மற்றும் ஸ்டைலான செயற்பாட்டுத் திறன் மிக்க Tata Xenon Yodha வாகனமானது, சொகுசையும் பாதுகாப்பையும் உறுதியளிக்கும் அதே நேரத்தில், தினசரி நடவடிக்கைகளுக்கான சிரமமின்றிய பொருட்கள் போக்குவரத்தையும் உறுதி செய்கிறது.
இந்த ஸ்மார்ட் Pick-up ஆனது, 4×2 கட்டமைப்புடன், 1250 கிலோகிராம் எடையுள்ள சரக்குகளை ஏற்றும் திறனைக் கொண்டுள்ளது. 3.0-litre டீசல் எஞ்சின் மூலம் இயங்கும் இது, 85hp (குதிரை வலு) மற்றும் 250Nm முறுக்குவிசையை வழங்குகிறது. இப்பிரிவில் அதிக chassis (சேஸி) தடிப்பத்துடன், வலுவான முன்புற front overhang, உயர்ந்த உலோகத் தரம், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மூலம் இவ்வாகனம் உச்சபட்ச பாதுகாப்பு மற்றும் பாவனைக்காலம் ஆகியவற்றை உறுதி செய்கிறது. நிலப்பரப்பிற்கும் வாகனத்திற்கும் இடையிலான 210 mm இடைவெளி மற்றும் பவர் ஸ்டீரிங் ஆகியன அதனை இலகுவாக செலுத்த வழிவகுக்கிறன. இந்த அம்சமானது, சவால்மிக்க நிலப்பரப்புகளிலும் அதிக சுமைகள் கொண்ட சந்தர்ப்பங்களிலும் சிறப்பாக செயற்பட அனுமதிக்கிறது. புதிய Tata Xenon Yodha வாகனங்கள், 18 மாதங்கள் அல்லது 100,000 கிலோமீற்றர் எனும் விரிவான உத்தரவாதத்தையும் கொண்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM