அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வருவதன் மூலமே நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும் ; வஜிர அபேவர்தன!

30 Jul, 2024 | 07:08 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையின் எதிர்காலத்தை கட்டியெழுப்புதென்றால் தற்போது இருக்கின்ற அரசியல் முறையில் நிச்சயமாக  மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுவானதொரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

இலங்கையின் எதிர்காலத்துக்காக தற்போதுள்ள அரசியல் முறை மாற்றப்பட வேண்டும். அது தொடர்பில் அரசியல் பல கட்சியல் கட்சிகளை சந்தித்து கலந்துரையாட வேண்டி இருக்கிறது. இளைஞர்களும் இன்று மாற்றத்தையே எதிர்பார்க்கின்றனர்.  

இன்று உலகம் மாறியுள்ளது. அந்த மாற்றமடையும் உலகத்துடன் எமது நாடும் முன்னுக்கு செல்லவேண்டும். ரணில் விக்ரமசிங்க  உலகத்தாருடன் மாற்றத்தை விரும்பும் தலைவர். எமது நாட்டை சர்வதேச ரீதியில் உயர்ந்த நிலையில் வைப்பதற்கே அவர் எப்போதும் சிந்தித்து வருகிறார். 

அத்துடன் நாட்டில் தற்போது இருந்துவரும் அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என்றே ரணில் விக்ரமசிங்க தெரிவித்து வருகிறார். அதனை மாற்றுவதாக இருந்தால் இந்த நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். நாங்கள் எப்போதும் இந்த நாட்டின் எதிர்காலத்துக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். அதேபோன்று எமது நாட்டின் எதிர்கால சந்ததியினர் தொடர்பில் சிந்திக்க வேண்டும். 

ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவம் 42 வருடங்களாகும். அவர் 1077இல் இருந்து தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இறுதியாக 2020 பொதுத் தேர்தலில் அவரும் நான் உட்பட அனைவரும் தோல்வியடைந்தோம். தோல்வியும் வெற்றியை போன்று முக்கியமானதகும்.  

நாங்கள் உண்மையை பேசியதாலே அன்று தோலியடைந்தோம்.பொய் மற்றும் சுவாரஷ்ணமான கதைகளை கேட்பதற்கு மக்கள் விரும்புவார்கள். என்றாலும் பொய், சிவாரஷ்யமான கதைகளை சொல்லி மக்களை ஏமாற்ற ரணில் விக்ரமசிங்க விரும்பவில்லை. அதனாலே கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தோம். 

தற்போதும் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் பொருளாதார ரீதியில் நாடு இன்னும் முழுமையான ஸ்திர நிலைக்கு வரவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விமானப்படை 75ஆம் ஆண்டு விழா: வான்...

2026-03-07 05:27:05
news-image

ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் -...

2026-03-07 04:39:24
news-image

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன்...

2026-03-07 04:25:51
news-image

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது...

2026-03-06 14:18:57
news-image

பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக்...

2026-03-06 15:08:38
news-image

நாட்டைப் பற்றவைக்கப் பார்க்கும் 'ஹனுமான்கள்': போலிப்...

2026-03-06 14:30:58
news-image

அவசரகால நிலை தமிழர் குரல்வளையை நெரிக்கும்...

2026-03-06 14:31:42
news-image

ஈரான் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டக்...

2026-03-06 15:47:59
news-image

அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப்...

2026-03-06 15:55:46
news-image

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான்...

2026-03-06 15:47:28
news-image

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து...

2026-03-06 17:06:57
news-image

அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை...

2026-03-06 17:17:23