2024 முதல் 5 மாதங்களில் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 64% ஆக குறைந்துள்ளது - ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Published By: Digital Desk 3

30 Jul, 2024 | 05:46 PM
image

கடந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 63.8 சதவீதம் குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 

2023ஆம் ஆண்டு மே 31ஆம் திகதிக்கு இடையில் 1,014 பில்லியன் ரூபா வரவுசெலவுத் திட்ட இடைவெளி காணப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் வரவு செலவுத் திட்ட இடைவெளி 366 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

முறையான பொருளாதார வேலைத்திட்டத்தின் ஊடாக நாடு முன்னோக்கி நகர்ந்ததன் விளைவாகவே இந்த நிலையை அடைய முடிந்ததாக அவர் வலியுறுத்தினார். அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார செயற்பாட்டாளர்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக சுங்க திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் பிரதான அதிதியாக கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார். 

இதன் மூலம் இலங்கையில் உள்ள 31 முன்னணி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன், சுங்க சோதனைகள் இன்றி தங்களது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். பல வருடங்களாக அவற்றின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கண்காணிப்புக்குப் பிறகு, இந்தச் சான்றிதழைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத்துறையானது அரசாங்கத்தினால் வழங்கப்படும் வருமான இலக்குகளை எப்பொழுதும் பூர்த்தி செய்து நாட்டின் பொருளாதாரத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கும் என அமைச்சர் வலியுறுத்தினார். 

2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 1,537 பில்லியன் ரூபா வருமான இலக்கில் 708 பில்லியன் ரூபா வருமானத்தை ஏற்கனவே பூர்த்தி செய்ய முடிந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். முக்கிய வருமான ஆதாரமாக விளங்கும் வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தலேயே சுங்கத்துறையினர் அந்த இலக்குகளை வெற்றிகரமாக அடைந்து வருவது விசேட அம்சமாகும் எனவும் அமைச்சர்  குறிப்பிட்டார்.

இறுதியாக, 2018ஆம் ஆண்டு இலங்கைக்குள் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட போது, மொத்த வருமானமான 923 பில்லியன் ரூபாவில் 204 பில்லியன் அல்லது 22 சதவீதம்  வாகன இறக்குமதி மூலம் பெறப்பட்டதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

2019 ஆம் ஆண்டின் மொத்த வருமானத்தில் 16 சதவீதம் அல்லது 130 பில்லியன் ரூபா வாகன இறக்குமதி மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன்...

2024-10-04 02:25:10
news-image

வடமாகாண போக்குவரத்து தொடர்பில் கலந்துரையாடல்

2024-10-04 02:17:30
news-image

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 8 சுயேட்சை...

2024-10-04 02:12:15
news-image

பொதுத்தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான...

2024-10-04 02:00:44
news-image

மக்களுக்கு வரிநிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது...

2024-10-03 21:47:02
news-image

கூரையில் இருந்து கீழே விழுந்து நபர்...

2024-10-03 21:10:24
news-image

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க...

2024-10-03 21:06:55
news-image

ஐ.நா. அமைப்பின் இணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு 

2024-10-03 21:01:26
news-image

மன்னார் பேசாலை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட...

2024-10-03 20:55:05
news-image

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம்...

2024-10-03 19:11:19
news-image

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன்...

2024-10-03 18:56:38
news-image

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள்...

2024-10-03 18:31:43