கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா' படத்தின் புதிய பாடல் வெளியீடு

Published By: Digital Desk 7

30 Jul, 2024 | 04:23 PM
image

சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஏக் காவோன் மேம்' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.‌

இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவ தர்ஷினி, ஆதிரா பாண்டியலக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'அடடா தினேஷா வெடிக்கிற பட்டாசா ..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் பாக்கியம் சங்கர் எழுத ,பின்னணி பாடகர் கானா விமலா பாடியிருக்கிறார். கானா பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடலின் வரிகளும், இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right