(எம்.மனோசித்ரா)
மொட்டு சின்னத்தில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான தீர்மானத்தை பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர் ஏற்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் பொதுஜன ஐக்கிய முன்னணியையும் விட நாட்டையே அதிகம் நேசிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (30) இடம்பெற்ற போது இதனைத்தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
விஜேதாச ராஜபக்ஷ அமைச்சு பதிவயை இராஜிநாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தவிர, தேர்தல் தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படவில்லை.
எவ்வாறிருப்பினும் அந்த சந்தர்ப்பத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் அரசியல் குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்தோம். இதன் போது மொட்டு சின்னத்தில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், எனவே தனக்கு ஆதரவளிக்குமாறும் கோரி அனுப்பி வைத்திருந்த கடிதம் தொடர்பில் இதன் போது அறிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டு, மேலும் 72 பேருடை இல்லங்கள் தீர்க்கிரையாக்கப்பட்டு நாடு முழுவதிலும் வன்முறை தலைதூக்கியிருந்த போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் அமைதியை நிலைநாட்டினார்.
அது மாத்திரமின்றி பொருளாதார நெருக்கடிகளிலிருந்தும் அவரே நாட்டை மீட்டெடுத்தார். எனவே அவருக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளரொருவரை களமிறக்குவதற்கான தீர்மானத்துக்கு எதிராகவும் நாம் வாக்களித்தோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும், பொதுஜன ஐக்கிய முன்னணி மீதும் மரியாதையும் அன்பும் வைத்திருக்கின்றோம்.
ஆனால் அதனை விட நாட்டையே அதிகம் நேசிக்கின்றோம். நாட்டின் எதிர்கால பயணம் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை முறையாக முன்னெடுத்து செல்லக் கூடிய ஒரேயொரு தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்ற அடிப்படையிலேயே நாம் அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM