பணத்தை பற்றி அதிகம் கவலைப் படுபவர்கள் நடுத்தர வர்க்கத்து மக்கள் என்று ஒரு பிரிவினர் கருதுகிறார்கள். ஆனால் ஏழை எளிய மக்களுக்கும் , மிகப்பெரிய தன வந்தர்களுக்கும் பணம் தொடர்பான அபிப்பிராயம் என்பது எப்போதும் நேர் நிலையானதாகவே இருந்து வருகிறது.
பணத்தை சம்பாதிப்பதும், சம்பாதித்த பணத்தை சேமித்து வைப்பதும் தான் அனைத்து தரப்பு மக்களின் முதன்மையான வாழ்க்கை பற்றாக இருக்கிறது. பிறக்கும் முதல் இறக்கும் வரை ஒருவருக்கு பணத்தின் தேவை என்பது வற்றாத நதி போல் இருந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் எம்முடைய முன்னோர்கள் செல்வ வளத்தை அதிகரிப்பதற்காக பல குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கோமாதா எனப்படும் பசுவை முன்வைத்து நிறைய குறிப்புகளை அளித்திருக்கிறார்கள். அதில் சிலவற்றைக் காண்போம்.
வெண்மை வண்ண பசுவிற்கு அவல், பருப்பு ஆகிய இரண்டையும் கலந்து சர்க்கரை பொங்கலை செய்து.. சர்க்கரைப் பொங்கலையும், மஞ்சள் பூசணி காயையும் நாளாந்தம் சாப்பிடுவதற்கு தானமாக வழங்கி வந்தால்... உங்களது பொருளாதார நிலை மூன்று மாதத்தில் உயர்வதை அனுபவத்தில் காணலாம்.
செந்நிற வண்ண பசு மற்றும் சாம்பல் வண்ண பசுக்களுக்கு நாளாந்தம் சிவப்பரிசி மற்றும் தேங்காய் துருவலைக் கொண்டு தயாரிக்கப்படும் புட்டு மற்றும் சிறிதளவு கருவேப்பிலை ஆகியவற்றை சாப்பிடுவதற்கு வழங்கி வந்தால்.. கோமாதாவின் ஆசியால் பொருளாதார உயர்வதை அனுபவத்தில் காணலாம்.
வெண்மை நிற பசுக்களுக்கு வெண் பொங்கல், உளுந்து வடை மற்றும் அகத்திக்கீரை இந்த மூன்றையும் சாப்பிடுவதற்கு தானமாக வழங்கி வந்தாலும் பொருளாதார நிலை மேம்படும்.
வெண்மை நிற பசுக்கள் மற்றும் மயிலிறகு வண்ண பசுக்களுக்கு சாம்பார் சாதம், கொத்தமல்லி, துளசி ஆகியவற்றை கலந்து சாப்பிடுவதற்கு தானமாக வழங்கி வந்தாலும்... பொருளாதார நிலை உயர்வதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM