தேர்தல் பிரசாரத்தை 50 இலட்சம் வாக்குகளை அடிப்படையாகக்கொண்டே ஆரம்பித்திருக்கிறோம் - ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ்

Published By: Vishnu

30 Jul, 2024 | 12:55 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்குகளை அடிப்படையாகக்கொண்டே நாட்டில் 1994ஆம் ஆண்டில் இருந்து ஜனாதிபதிகள் தெரிவாகி இருக்கின்றன. அதனால் நாங்கள் இந்த தேர்தல் பிரசாரத்தை 50 இலட்சம் வாக்குகளை அடிப்படையாகக்கொண்டே ஆரம்பித்திருக்கிறோம். இந்த தேர்தல் பெறுபேறு நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்கக்கூடிய தேர்தலாக இருக்கும் என ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

நீதி அமைச்சில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் 1994ஆம் ஆண்டில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட அனைத்து ஜனாதிபதிகளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்களின் அடிப்படையிலாகும். 2019இல் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு அளிக்கப்பட்ட 69இலட்சம் வாக்குகளில் 50இலட்சம் வாக்குகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வாக்குகளாகும். அந்த 50இலட்சம் வாக்காளர்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு யாரும் இல்லாத காரணத்தினால் நான் முன்வந்தேன்.அதனால் நாங்கள் இந்த தேர்தல் பிரசாரத்தை 50 இலட்சம் வாக்குகளை அடிப்படையாகக்கொண்டே ஆரம்பித்திருக்கிறோம்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியல் சபையின் 15இல்  12 என்னுடன் இருக்கிறது. ஏனைய 3 அமைச்சர் நிமல் சிறிபாலவுடன் இருக்கிறது. 240 பேர் கொண்ட கட்சியின் நிறைவேற்று சபையில்  20க்கும் குறைவானவர்கள வரை நிமல் சிறிபாலடிசிவ்வாவுடன் இருக்கின்றனர். என்னுடன் 220க்கும் அதிகமானவர்கள் இருக்கின்றனர். அதேபோன்று மாவட்ட அமைப்பாளர்களை நாங்கள் சந்தித்து கலந்துரையாடி வருகிறோம். அவர்களில் இரண்டு அல்லது 3பேரே பிரிந்து இருக்கின்றனர். ஏனையவர்கள் அனைவரும் எம்முடனே இருக்கின்றனர். 

நாங்கள் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துச்செல்லும்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அனைவரும் எம்முடன் இணைந்துகொள்ள வேண்டி ஏற்படுகிறது.  தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றாலும் தோலியடைந்தாலும் நிமல்சிறிபாலடி சில்வாவின் குழு தோல்யடையும். ஏனெனில் அடுத்து இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு போட்டியிட ஒரு கட்சியேனும் இல்லாத நிலையே ஏற்படப்போகிறது.

அதனால் அனைவரும் ஐக்கியப்பட்டு ஒழு அணியாக செயற்பட வருமாறு நான் பகிரங்கமாக அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். என்றாலும் மறுபக்கத்தில் இருப்பவர்களுக்கு ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. நீதிமன்றங்களில் வழக்கு நடவடிக்கைகள் இருக்கின்றன. அவற்றுக்கு அந்த இடத்தில் அவர்களுக்கு நிவாரணம் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அவற்றுக்கு என்னிடத்தில் நிவாரணம் கிடைக்கப்போவதில்லை என்பது அவர்களுக்கு தெரியும். 

அத்துடன் மொட்டு கட்சியில் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு என 10, 15இலட்சம் நிலையான வாக்குகள் இருக்கின்றன. அது அவர்கள் நிறுத்தப்போகும் வேட்பாளரை பொறுத்தே கிடைக்கும். என்றாலும் தற்போது அந்த கட்சியில் கேட்கப்போவதாக தெரிவிக்கும் நபருக்கு அந்த ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாது என்பது எங்களுக்கு தெரியும்.

இவை அனைத்தையும்விட  இலங்கை வரலாற்றில் இந்த தேர்தல் வரலாற்று முக்கியமான தேர்தல் என தெரிவிப்பது, மக்கள் இந்த தேர்தலில்  தேசிய வளங்களை பாதுகாக்க முடியுமான தெளிவான தலைவர் யார் என கவனிப்பார்கள். அடுத்தபடியாக அவருக்கு இருக்கும் அறிவு மற்றும் ஆற்றலை மக்கள் கவனிப்பார்கள். அவர் ஊழல் மோசடிகளுக்கு சம்பந்தப்பட்டவரா என்ற விடயத்தை பார்ப்பார்கள். அடுத்ததாக வேட்பாளரின் அரசியல் முதிர்ச்சி நிலையை பார்ப்பார்கள். என்றாலும் தற்போதுள்ள வேட்பாளர்களைவிட மக்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த தேர்தல் பெறுபேறு நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்கக்கூடிய தேர்தலாக இருக்கும் என நாங்கள் தெரிவிக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06