(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நிறைவேற்றதிகாரத்தைப் பயன்படுத்துகின்றார். வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு பிரச்சினைக்கு கலந்துரையாடி தீர்வு காண முடியாது. நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்ட பிரபஞ்சம், சக்வல போன்ற வேலைத்திட்டங்களை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆனால் அரசாங்கத்துக்கு இந்த சட்டம் ஏற்புடையது இல்லையா? ஹோமாகம பிரதேசத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டது சரியா? ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இவ்வாறான வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. எனவே தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
இந்நிகழ்வில் ஆற்றிய உரையில் நீதிமன்றத்தின் உத்தரவை திரிபுபடுத்தி பேசியுள்ளார். சபாநாயகரும், பிரதம நீதியரசரும் பேசி தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இது தவறான விடயமாகும். வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு பிரச்சினைக்கு கலந்துரையாடி தீர்வு காண முடியாது. நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அதனை மீறினால், மக்களும் அதனையே பின்பற்றுவர்.
நீதிமன்றத்தை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி தனது நிறைவேற்றதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவை அரசாங்கம் பின்பற்றாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டும். காரணம் தண்டனை சட்டக்கோவையின் கீழ் நீதிமன்ற உத்தரவை மீறுவது குற்றமாகும். எனவே சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குட்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியைக் கேட்டுக் கொள்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM