அசோக் செல்வனின் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தின் இசை வெளியீடு

29 Jul, 2024 | 07:08 PM
image

அசோக் செல்வன் திறமையான நடிகராக இருந்தாலும், பிரபலமான நடிகராக வலம் வந்தாலும், தயாரிப்பாளர்களுக்கும் பட குழுவினர்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்காத நடிகர் என்ற முத்திரையையும் பெற்றிருக்கிறார். இவர் நடிப்பில் தயாராகி இருக்கும் 'எமக்கு தொழில் ரொமான்ஸ்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் பங்கு பற்றாமல் புறக்கணித்திருக்கிறார். இது தொடர்பாக திரையுலகினரின் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கும் அசோக் செல்வனுக்கு, அவரது நலம் விரும்பிகள் புத்திமதிகளை எடுத்துரைக்க வேண்டும் என படைப்பாளிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'எமக்கு தொழில் ரொமான்ஸ்' எனும் திரைப்படத்தின் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, அழகம் பெருமாள், ஊர்வசி, எம். எஸ். பாஸ்கர், பகவதி பெருமாள், படவா கோபி, விஜய் வரதராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். திரைப்படத் துறை பின்னணியில் காதல் படைப்பாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் எம் . திருமலை தயாரித்திருக்கிறார்.

விரைவில் படமாளிகையில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதற்காக நடைபெற்ற விழாவில் ஆர். கே. செல்வமணி, கே. ராஜன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றினர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் திருமலை பேசும் போது, '' இப்படத்தின் நாயகனான அசோக் செல்வன் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் பங்கு பற்றாமல் புறக்கணித்திருக்கிறார். ஏன் பங்கு பற்றவில்லை ? என்பதற்கான காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. அவரது இந்த போக்கு கண்டனத்திற்குரியது. ஒரு  திரைப்படத்திற்கு தயாரிப்பாளர்கள் தான் முக்கியம் என்பதை அவர் உணர வேண்டும். அவரும் ஒரு படத்தினை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் தான்''  என குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிம்ரன் நடிக்கும் 'தி லாஸ்ட் ஒன்'

2024-09-07 15:08:05
news-image

விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தின் முதல்...

2024-09-07 15:02:33
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'வேட்டையன்' ஃபர்ஸ்ட்...

2024-09-07 14:47:15
news-image

திரையிசை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் 'மீசை...

2024-09-06 14:38:06
news-image

'தலைவெட்டியான் பாளையம்' புதிய நகைச்சுவை இணைய...

2024-09-06 13:16:44
news-image

ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 'தேவரா பார்ட்...

2024-09-05 19:09:14
news-image

யோகி பாபு வெளியிட்ட 'ஜாலி ஓ...

2024-09-05 18:09:33
news-image

தி கிரேட்டஸ்ட் ஒஃப் ஆல் டைம்...

2024-09-05 17:59:12
news-image

புது பிக்பொஸ் விஜய் சேதுபதி 

2024-09-05 14:21:00
news-image

புதுமுக நடிகர் அத்வே நடிக்கும் 'சுப்ரமண்யா'...

2024-09-04 17:56:46
news-image

மைக்கேல் தங்கதுரை நடிக்கும் 'ஆரகன்' படத்தின்...

2024-09-04 17:53:06
news-image

அவல நகைச்சுவை படைப்பாக தயாராகும் 'நிர்வாகம்...

2024-09-04 17:50:39