தபால் மூல வாக்களிப்பு : விண்ணப்பங்களை ஆகஸ்ட் 05 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பித்தல் வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: Vishnu

29 Jul, 2024 | 07:07 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெறும் வாக்காளர்கள் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை 2024.08.05 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் ஒப்படைத்தல் வேண்டும். நிச்சயிக்கப்பட்ட திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் மீள்பரிசீலனை இல்லாமல் இரத்து செய்யப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

தபால்மூல வாக்களிப்பு குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான புதிய தேருநர் இடாப்பு (வாக்காளர் இடாப்பு) பயன்படுத்தப்படும்.தபால் மூல வாக்காளரின் நலனுக்காக நாடளாவிய ரீதியில் உள்ள சகல தேர்தல் தொகுதிகளுக்கு உரிய 2024 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு 2024.07.26 ஆம் திகதி முதல் அலுவலக நேரத்தின் போது அனைத்து மாவட்ட செயலாளர் காரியாலயம்(கச்சேரி),பிரதேச செயலாளர் காரியாலயம்,கிராம சேவகர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு மேலதிகமாக அரச நிர்வாகம்.உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள்,உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சு,தொழில் திணைக்களம்,பதிவாளர் ஆணையாளர் திணைக்களம்,தபால் தலைமையகம்,கடற்றொழில் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு,நகர அபிவிருத்தி ஆகிய அரச நிறுவனங்களின் காரியாலயங்களில் உரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ வலைத்தளம்....ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.அனைத்து மாவட்டங்களின் தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் ஒப்படைத்தல் வேண்டும்.

தபால்மூல வாக்களிப்பு வசதியை பெற்றுக் கொள்வதற்காக பூரணப்படுத்தப்பட வேண்டிய விண்ணப்ப படிவத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்.

தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள் 2024.08.05 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான திகதியின் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் ஒப்படைத்தல் வேண்டும்.விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி தினத்தற்கு அதாவது 2024.08.05 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் உரிய மாவட்ட தேர்தல் காரியாலயத்துக்கு கிடைக்கப் பெற வேண்டும்.

2024.08.05 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் மீள் பரிசீலனை செய்யாமல் இரத்து செய்யப்படும்.ஆகவே விரைவாக விண்ணப்பங்களை  உறுதிப்படுத்தும் அலுவலர் ஊடாக உரிய மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"முழு நாடுமே ஒன்றாக" போதைப்பொருள் சுற்றிவளைப்பில்...

2025-12-16 11:48:07
news-image

விபத்துக்குள்ளான அசோக ரன்வலவின் வாகனத்தில் தொழில்நுட்ப...

2025-12-16 11:23:20
news-image

தெற்கு அதிவேக வீதியில் விபத்து ;...

2025-12-16 12:12:28
news-image

நூற்றாண்டை கடக்கும் இலங்கை வானொலி!

2025-12-16 12:01:45
news-image

நேற்றைய தினத்தில் மாத்திரம் வாகன விபத்துக்களில்...

2025-12-16 10:51:36
news-image

கம்பளை அம்புலுவா உயிரியல் பல்வகைமை வலயத்தின்...

2025-12-16 11:49:58
news-image

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை!

2025-12-16 11:22:54
news-image

மண்சரிவால் சேதமடைந்த வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட...

2025-12-16 11:49:18
news-image

மூங்கிலாறில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை: கணவன்–மனைவி...

2025-12-16 11:46:36
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிடியாணை

2025-12-16 12:10:30
news-image

கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக்...

2025-12-16 10:33:26
news-image

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப்...

2025-12-16 10:34:43