ரசிகர்கள்- திரையுலக வணிகர்கள்- பட மாளிகை அதிபர்கள் என பலரின் எதிர்பார்ப்பில் இருக்கும் அஜித் குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' எனும் திரைப்படத்தின் புதிய தகவல்களை படக் குழுவினர் பிரத்யேக போஸ்டர் மூலம் வெளியிட்டிருக்கிறார்கள்.
இயக்குநரும், நடிகருமான மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடா முயற்சி' எனும் திரைப்படத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.
எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 31 ஆம் திகதியன்று தீபாவளி திருநாளை ஒட்டி வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தருணத்தில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் அர்ஜுனனின் கதாபாத்திர தோற்றத்தை புகைப்படமாக படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள். அஜித் குமார் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற 'மங்காத்தா' எனும் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் குமார் - அர்ஜுன் கூட்டணி இணைந்திருப்பதால்... இந்த திரைப்படத்திற்கு வணிக ரீதியான எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM