( அட்டன் கிளை)
களனிவெளி பிளாண்டேஷன் கம்பனி நிர்வாகத்தின் கீழ் உள்ள பீட்று தோட்ட தேயிலைத் தொழிற்சாலையினுள் 30/05/2024 அன்று அத்துமீறி பிரவேசித்து குழப்ப நிலைமைகளை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் இ.தொ.கா. பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உட்பட நால்வர் தமது சட்டத்தரணிகள் சகிதம் இன்று திங்கட்கிழமை (29) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
கடந்த 22 ஆம் திகதி இச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகளை நுவரெலியா பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பதில் நீதவான் ஜயமினி அம்பகாவத்த பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து நகர்த்தல் பத்திரம் ஒன்றை முன்வைத்து இன்று திங்கட்கிழமை (29) நீதிமன்றில் ஆஜரான அமைச்சர் ஜீவன் உள்ளிட்ட ஏனைய இ.தொ.கா. உறுப்பினர்கள் முன்னிலையான போது, இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரையும் பொலிஸார் இது வரை பெயரிடாததால் எவரையும் கைது செய்ய வேண்டாம் என நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு, முன்னர் உத்தரவிட்டதன் படி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதியன்று விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குறித்த சம்பவம் தொடர்பில் உண்மையான தகவல்களை நுவரெலியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அல்லது உதவி பொலிஸ் அத்தியட்சகர் மன்றுக்கு அறிக்கையிட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM