இந்துக்கடவுள்களின் விக்கிரகங்கள் சேதமாக்கப்படுகின்றன- இலங்கையில் மத சிறுபான்மையினர் அரசாங்கத்தினால் இலக்குவைக்கப்படுகின்றனர் - சர்வதேசமனித உரிமை கண்காணிப்பகம்

Published By: Rajeeban

29 Jul, 2024 | 04:45 PM
image

இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் வழிபாட்டுதலங்கள்  மற்றும் அது தொடர்பான பகுதிகளிற்கு செல்வதை தடுக்கும், மறுக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,அவ்வாறான இடங்களை பௌத்தஸ்தலங்களாக ,பௌத்தர்களிற்கு உரிய பகுதிகளாக மாற்றுவதிலும் அரசாங்கம் ஈடுபடுகின்றது என தெரிவித்துள்ளது.

தொல்பொருள் திணைக்களம் உட்பட அரசஸ்தாபனங்கள் ,இராணுவம் ,பொலிஸார் இணைந்து மத சிறுபான்மையினத்தவர்களின் கலாச்சாரம் ,வழிபாடுகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் ஒரு ஒருங்கிணைந்த மூலோபாயத்தை முன்னெடுக்கின்றனர் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குகிழக்கி;ல் சிங்களபௌத்த குடியேற்றங்களை ஊக்குவிக்கின்றனர்,இது பெரும்பான்மையான தமிழ் முஸ்லீம் மக்களின் சொத்து மற்றும் மதஉரிமை ஆகியவற்றிற்கு தீங்குவிளைவிப்பதாக காணப்படுகின்றது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

26வருட ஈவிரக்கமற்ற உள்நாட்டு யுத்தத்தின் ;  பின்னர் பிரிவினை வாத தமிழீழ விடுதலைப்புலிகளை  இலங்கை அரசாங்கம் 2009 இல் தோற்கடித்தது முதல், வடக்குகிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் பாதுகாப்பு தரப்பினரும் செயற்பாட்டாளர் குழுக்களை கண்காணிப்பது,உடன்பட மறுத்தலை ஒடுக்குவது,போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன்,மதசுதந்திரத்தி;ற்கான உரிமையை அதிகளவில் மீறிவருகின்றனர் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்தெரிவித்துள்ளது.

வடக்குகிழக்கில் உள்ள இந்துகோவில்களில்  அதிகாரிகள் ,பௌத்த மதகுருமாருடன்  இணைந்து இந்து மத கடவுள்களின் விக்கிரகங்களை  சேதப்படுத்தியுள்ளனர்,அல்லது அகற்றியுள்ளனர், வழிபாட்டில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்தியுள்ளனர் தாக்கியுள்ளனர், கைதுசெய்துள்ளனர் ,அவர்களி;ற்கு வழிபாட்டிற்கான அனுமதியை மறுத்துள்ளனர், என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,நில அபகரிப்பின் மூலம் தமிழ் முஸ்லீம்களின் சொத்துக்களை அவர்கள் இலக்குவைத்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சிறுபான்மையினத்தவர்களின் கலாச்சார மத அடையாளங்கள்  மீதான அதிகரித்த ஒடுக்குமுறைகள் காரணமாக நல்லிணக்கம் குறித்து இலங்கை அரசாங்கம் உரத்தகுரலில் பேசுவது போலியானதாக , வெறுமையானவையாக தோன்றுகின்றது  என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதிஇயக்குநர் மீனாக்சிகங்குலிதெரிவித்துள்ளார்.

ஏனையமக்களை பலிகொடுத்து சிங்களபௌத்த தேசியவாதத்தை ஊக்குவிக்கும் மலினமான இந்த நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு சர்வதேசத்தின் ஒருங்கிணைந்த அழுத்தம் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்க்கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு...

2025-06-17 17:16:04
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய...

2025-06-17 18:27:52
news-image

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார்...

2025-06-17 18:14:57
news-image

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; அகழ்வாய்வுகள் முழுமையாக...

2025-06-17 18:06:42
news-image

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் சந்தமாலி...

2025-06-17 17:48:07
news-image

ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2025-06-17 17:10:33
news-image

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை...

2025-06-17 16:48:00
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின்...

2025-06-17 17:03:39
news-image

காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள்...

2025-06-17 17:02:57
news-image

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது -...

2025-06-17 16:44:12
news-image

மொரட்டுவை பகுதியில் கடலுக்குச் சென்று மாயமான...

2025-06-17 16:32:10
news-image

மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவன்...

2025-06-17 16:21:16