மட்டக்களப்பு  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிலுள்ள கல்லடி பிரதேசத்தில் மனித பாவனைக்குதவதாத பெருமளவு உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை விற்பனை செய்த 7 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்லடி பிரதேச பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். 

கல்லடி பிரதேசத்தில் உள்ள சில்லறைக்கடைகள், உணவகங்களை, அங்காடி நிலையங்களில் உட்பட பல இடங்களில் சுகாதார வைத்திய பரிசோதகர்கள் பரிசோதனை செய்த போது பாவனைக்கு உதவாத, காலாவதியான, போலியான லேபல் பொருத்திய, நிறம்கலந்த, மருத்துவச் சான்றிதழ் அற்ற, உணவுக்கட்டளைச் சட்டத்தை மீறிய பெருமளவு உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 1 இலட்சத்து 50ஆயிரம் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுத்தப்படுவடுதுடன் பொருட்களும் மன்றில் ஒப்படைக்கப்படவுள்ளன.

- ஜவ்பர்கான்