இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் 64 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் (SLAP) 64 ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் 2024 ஜூன் 28 அன்று கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைப்பெற்றது.
தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் தலைவராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், அனில் காரியவசம் தனது வகிபாகத்தின் ஆழமான பொறுப்புகளை பிரதிபலித்து, கடந்த கால தலைவர்களின் உன்னதமான பாரம்பரியத்திற்கு ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்தினார்.
மேலும், அவர்களின் சாதனைகளை கட்டியெழுப்பவும், அவர்களின் விலைமதிப்பற்ற அனுபவங்களை மேம்படுத்தவும் இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் மதிப்பிற்குரிய தரத்தை நிலைநிறுத்தவும் அவர் உறுதியளித்தார்.
செயற்குழுவிற்குள் ஒன்றிணைந்த தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இலங்கையில் SLAP மற்றும் அச்சகத்தார் துறையின் முன்னேற்றத்திற்காக நேரத்தையும் முயற்சியையும் அர்ப்பணித்து, அனைத்து சங்க நடவடிக்கைகளிலும் ஒற்றுமையுடன் மற்றும் செயலூக்கத்துடன் பங்கேற்குமாறு காரியவசம் அழைப்பு விடுத்திருந்தார்.
இலங்கை அச்சகத்தார் சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு அசைக்க முடியாத ஆதரவையும் , குறிப்பாக சவாலான காலங்களில் உதவியையும் வழங்கியுள்ளது என பொதுச்செயலாளராரான முருகேசு செந்தில்நாதன் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அதிகாரிகளுடன் தொடர்ச்சியான உரையாடலில் ஈடுபடுவதன் மூலமும், கூட்டு முயற்சிகள் மூலமாகவும், இலங்கை அச்சகத்தார் சங்கம் தடைகளைத் தகர்க்கவும், தொழில் துறையில் அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் முடியுமானதாக இருந்தது.
சவால்கள் இருந்தபோதிலும், இலங்கை அச்சகத்தார் சங்கம் தொடர்ந்தும் செயல்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டது. ஆண்டு முழுவதும் சங்கத்தின் முயற்சிகளுக்கு தாராளமாக ஆதரவளித்த அனைத்து அனுசரணையாளர்களுக்கும் செந்தில்நாதன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இலங்கையில் அச்சகத்தார் துறையில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், சங்கத்தை நிலைநிறுத்துவதற்கும் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் நிதி பங்களிப்புகள் இன்றியமையாதவையாகும்.
பொருளாளர் உதய ஹெட்டியாராச்சி இங்கு கருத்து வெளியிடுகையில், பல நிகழ்வுகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் மூலம் ஒரு மாபெரும் வெற்றிகரமான ஆண்டையும் அறிவித்திருந்தார். SLAP ஆனது தொழில்துறைக்கு சிறந்த ஒத்துழைப்பை நல்கியதுடன் துறையை முன்னேற்ற அரச நிறுவனங்களுடன் நெருக்கமாக செயற்பட்டது.
2023/24 ஆம் நிதியாண்டு SLAP க்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. மேலும் இந்த காலகட்டத்தில் பல நிதி திரட்டும் நடவடிக்கைகளை எங்களால் வெற்றிகரமாக நிறைவேற்றவும் முடிந்தது.
இலங்கை அச்சகத்தார் கண்காட்சி 2023 மற்றும் தேசிய அச்சு விருது 2023 ஆகியவை சங்கத்திற்கு கணிசமான இலாபத்தை ஈட்டித் தந்தமை இந்த ஆண்டின் முக்கிய சிறப்பம்சங்களாகும். “பதுரு பார்ட்டி 2023”, யாழ்ப்பாணம் மற்றும் குருநாகலில் நடத்தப்பட்ட அச்சகத்தார் கருத்தரங்கு மற்றும் “printers sixes 2024” ஆகிய நிகழ்வுகளும் 2023/24 ஆம் ஆண்டில் சங்கத்திற்கு வெற்றியை ஈட்டித்தந்தமை குறிப்பிடத்தக்கது.
64வது வருடாந்த பொதுக்கூட்டமானது, இலங்கையின் அச்சுத் துறையில் முன்னேற்றம் மற்றும் சிறந்து விளங்குவதற்கான குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் SLAP அதன் அங்கத்தவர்கள் மற்றும் தொழில் துறை மீதான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM