மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 2,142 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் வழங்கிய தகவலின்படி,
ஐந்து வயதுக்குட்பட்ட 2,142 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,15,920 சிறுவர்கள் மிதமான போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 27,812 சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, கண்டி மாவட்டத்தில் 970 சிறுவர்களும், மாத்தளை மாவட்டத்தில் 461 சிறுவர்களும் , நுவரெலியா மாவட்டத்தில் 711 சிறுவர்களும் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கண்டி மாவட்டத்திலிருந்து 7626 பேரும் , மாத்தளை மாவட்டத்திலிருந்து 3716 பேரும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 4588 பேரும் மிதமான போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்திலிருந்து 11,044 பேரும், மாத்தளை மாவட்டத்திலிருந்து 4051 பேரும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 12,717 பேரும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், சுகாதார உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில், கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை கண்டி மாவட்டத்தில் 76 ஆகவும், யட்டிநுவர சுகாதார அதிகாரி பிரிவில் 68 ஆகவும், மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல சுகாதார அதிகாரி பிரிவில் 67 ஆகவும், வில்கமுவ சுகாதார அதிகாரி பிரிவில் 67 ஆகவும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவான ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவர்களாக கொத்மலை சுகாதார அதிகாரி பிரிவில் 89 பேரும் , லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 84 பேரும் பதிவாகியுள்ளனர்.
இந்த புள்ளிவிபரங்களின்படி நுவரெலியா மாவட்டத்தில் சிறுவர்களுக்கு போசாக்கின்மை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM