தடுப்புக்காவலில் வைத்து சந்தேகநபர் மீது தாக்குதல் ; இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணியிடை நீக்கம்

Published By: Digital Desk 3

29 Jul, 2024 | 03:56 PM
image

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில், தடுத்து வைத்து சந்தேக நபர் ஒருவரை மூர்க்க தனமாக தாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய்யப்பட்டுள்ளனர். 

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் தடுத்து வைத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 

தாக்குதலில் காயமடைந்த இளைஞன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று இருந்தார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , இளைஞனை தாக்கிய குற்றச்சாட்டில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், இருவரையும் தலா 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. 

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் திணைக்கள ரீதியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் விசாரணைகள் முடிவடையும் வரையில் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் ஜனாதிபதி மீது அளவுக்கதிகமான நம்பிக்கை...

2024-09-18 16:30:03
news-image

தமிழரசுக் கட்சி கட்சியாகவே இருக்கிறது ;...

2024-09-18 16:51:03
news-image

வீணடிக்காமல் வாக்குகளை பயன்படுத்துங்கள் - சஜித்  

2024-09-18 16:47:17
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் பொதுவேட்பாளருக்கும்...

2024-09-18 16:42:11
news-image

வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை எமது...

2024-09-18 16:11:58
news-image

தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு மாத்திரம்...

2024-09-18 16:59:03
news-image

வாக்களிப்பது எப்படி ?

2024-09-18 16:22:03
news-image

மாத்தறையில் 10 வாள்களுடன் ஒருவர் கைது

2024-09-18 16:05:42
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் எக்கானமி வகுப்பில் உணவை...

2024-09-18 16:47:43
news-image

பாதாள உலக கும்பல் தலைவரின் முக்கிய...

2024-09-18 16:17:47
news-image

தணமல்விலவில் 3,570 கஞ்சா செடிகளுடன் ஒருவர்...

2024-09-18 15:37:36
news-image

விருப்பு வாக்களிப்பு செயன்முறை தொடர்பில் மக்கள்...

2024-09-18 15:08:39