ஒருவரை கொலை செய்யும் நோக்கில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் அம்பலாங்கொட புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரிடமிருந்து ரிவோல்வர் ரக துப்பாக்கி, 38 ரவைகள் மற்றும் 11,760 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 16ம் திகதி இடம்பெற்ற முன்னாள் கிரிக்கட் வீரர் தம்மிக்க நிரோஷனின் கொலை சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கில் ஒருவரை கொலை செய்ய ஒப்பந்தம் பெற்றுள்ளதாக சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதானவர்களில் 27 வயதுடைய சந்தேக நபர் நிறப்பூச்சு பூசுபவராக பணிபுரிபவர் எனவும் 29 வயதுடைய சந்தேக நபர் அதே பிரதேசத்தில் முச்சக்கர வண்டிகளை பழுது பார்ப்பவராக பணிபுரிபவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM