மகளிர் ஆசிய கிண்ணத்தை முதல் தடவையாக சுவீகரித்து வரலாறு படைத்தது இலங்கை

Published By: Vishnu

28 Jul, 2024 | 09:05 PM
image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற மகளிர் ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்ட இலங்கை முதல் தடவையாக மகளிர் ஆசிய சம்பியனாகி வரலாறு படைத்தது.

இரண்டு வகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 5 தடவைகள் இந்தியாவிடம் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை இம்முறை இந்தியாவை மிக இலகவாக வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை சூடியது.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 166 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி ஆசிய சம்பியனானது.

இலங்கையின் இந்த வெற்றியில் சமரி அத்தபத்து, ஹஷினி சமரவிக்ரம, காவிஷா டில்ஹாரி ஆகியோரின் பொறுப்புணர்வுடனான துடுப்பாட்டங்கள் பெரும் பங்காற்றின.

இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. சமரி அத்தபத்துவின் கவனக் குறைவால் விஷ்மி குணரட்ன ஒரு ஓட்டத்துடன் ரன் அவுட் ஆனார்.

என்றாலும் அதற்கு பிராயச்சித்தமாக சமரி அத்தபத்து திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஹர்ஷிதா சமரவிக்ரமவுடன் 2ஆவது விக்கெட்டில் 62 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

சமரி அத்தபத்து 43 பந்துகளில் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களை பெற்றார்.

தொடர்ந்து ஹர்ஷிதா சமரவிக்ரம, காவிஷா டில்ஹாரி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 40 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை ஆசிய சம்பியனாவதை உறுதிசெய்தனர்.

ஹர்ஷிதா சமரவிக்ரம 51 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட  69 ஓட்டங்களுடனும் காவிஷா டில்ஹாரி 16 பந்துகளில் 30 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

ஷபாலி வர்மா, ஸ்ம்ரித்தி மந்தனா ஆகிய இருவரும் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து  நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஷபாலி வர்மா 16 ஓட்டங்களுடன் வெளியேறிய சொற்ப நேரத்தில் உமா சேத்ரி (9) ஆட்டம் இழந்தார்.

அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்று நடையைக் கட்டினார். (87 - 3 விக்.)

இந நிலையில் மந்தனாவும் ஜெமிமா ரொட்றிகஸும் ஜோடி சேர்ந்து 4ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து  அணியை சிறந்த நிலையில் இட்டனர்.

எவ்வாறாயினும் ரொட்றிகஸ் (29), மந்தனா ஆகிய இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (133 - 5 விக்.)

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மந்தனா 10 பவுண்டறிகளுடன் 69 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் ரிச்சா கோஷ் 14 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகி: ஹர்ஷிதா சமரவிக்ரம, தொடர்நாயகி: சமரி அத்தபத்து.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51
news-image

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor...

2026-08-05 17:51:06
news-image

பொதுநலவாய போட்டிகளில் தங்கம் வென்ற ரொமேஷ்...

2026-08-05 12:32:55
news-image

கடைசி மகளிர் ரி20இல் பாகிஸ்தானின் சுழற்சியில்...

2026-08-04 23:54:46
news-image

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் இலங்கை...

2026-08-04 23:18:26
news-image

சீ ஹோக்ஸ் உடனான பரபரப்பான போட்டியில்...

2026-08-04 20:00:25
news-image

கலம்போ எவ். சி. அணியிடம் வீழ்ந்த...

2026-08-04 09:29:41