(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் அத்துடன் பொருளாதார மீட்சிக்கான சிறந்த கொள்கைத் திட்டங்களையும் முன்னிலைப்படுத்த வேண்டும்.நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் தலைவர் பிரசாத் தி விஸர் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய நூற்றாண்டு முன்னணி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படுமா அல்லது கடந்த காலங்களை போன்று தேர்தல்கள் காணாமலாக்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது. ஜனாதிபதித் தேர்தல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தேர்தலை பிற்போட்டால் அது ஜனாதிபதியின் அரசியல் புகழுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இருந்து ஜனாதிபதி நாட்டை பாதுகாத்தார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் திட்டங்களையும் பொருளாதாரக் கொள்கைகளையும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஜனாதிபதித் தேர்தலை மக்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் மூவரும் தங்களின் சொத்து விபரங்களை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். அத்துடன் ஒருவரின் கருத்தை பிறிதொருவர் விமர்சித்துக்கொண்டிருக்காமல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் சிறந்த கொள்கைகளை முன்வைக்கவேண்டும்.
இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது. நாட்டு மக்கள் பொருளாதார முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு அரசியல் ரீதியிலான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.அரசியல்வாதிகள் நாட்டு மக்களை தவறான வழிநடத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் தமது வாக்குரிமையை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.
(படங்கள் : ஜே. சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM