கொம்பனித்தெரு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த ஒருதொகை சிகரெட்டுக்களுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 32 ஆயிரத்து 828 சிகரெட்டுக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்தில் 26 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.