பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு; ஆசிரியை, எட்டு வயது மாணவன் மரணம்

Published By: Devika

11 Apr, 2017 | 11:09 AM
image

பாலர் பாடசாலைக்குள் திடீரெனப் புகுந்த நபரொருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியையும், எட்டு வயது மாணவனும் பரிதாபமாகப் பலியாகினர். துப்பாக்கிதாரியும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொண்டவரின் பெயர் செட்ரிக் எண்டர்சன் என்றும், இவர், கொல்லப்பட்ட ஆசிரியையான இலெய்ன் ஸ்மித்தின் முன்னாள் கணவர் என்றும் கூறப்படுகிறது.

போதைப்பொருள் பயன்பாடு, குடும்ப வன்முறை போன்ற பல குற்றச்சாட்டுக்களையடுத்து செட்ரிக்கை விட்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன் இலெய்ன் ஸ்மித் பிரிந்தார்.

இந்நிலையில், இலெய்னிடம் சில பொருட்களைக் கையளிக்க வேண்டும் என்று கூறி, இலெய்ன் ஸ்மித் பணியாற்றிய பாலர் பாடசாலைக்குள் நுழைந்தார் செட்ரிக். இலெய்னின் வகுப்பறைக்குச் சென்ற அவர், ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தன்வசமிருந்த துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாகச் சுட்டார்.

இதில் இலெய்னும், அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த எட்டு வயதுச் சிறுவன் ஒருவனும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொரு சிறுவன் படுகாயமடைந்தான். சற்றும் தாமதிக்காமல் செட்ரிக் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார்.

ஆபத்தான நிலையில் செட்ரிக்கும் மற்றொரு சிறுவனும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். எனினும் செட்ரிக்கின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

 இந்தச் சம்பவத்தினால் கடும் அதிர்ச்சிக்குள்ளான அப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை முன் உடனடியாகத் திரண்டனர். எனினும் சுமார் இரண்டு மணி நேரங்களுக்குப் பின்னரே அவர்கள் தங்கள் பிள்ளைகளைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ விமானம் மலையில் மோதி விபத்து...

2025-11-12 09:40:53
news-image

டெல்லி குண்டுவெடிப்பு தற்கொலை குண்டுதாரி அடையாளம்!

2025-11-11 12:02:26
news-image

டெல்லி கார் வெடிப்பு: இராமநாதபுரம் கடலோரப்...

2025-11-11 11:43:48
news-image

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு:...

2025-11-10 22:09:33
news-image

டெல்லியில் பதற்றம்: செங்கோட்டை அருகே கார்...

2025-11-10 20:15:35
news-image

ஈக்வடோர் சிறைக் கலவரத்தில் 31 கைதிகள்...

2025-11-10 17:20:59
news-image

பனோரமா ஆவணப்பட சர்ச்சை: பிபிசி பணிப்பாளர்...

2025-11-10 11:20:06
news-image

பிலிப்பைன்ஸில் பங்-வோங் சூறாவளி தாக்கியதில் இருவர்...

2025-11-10 11:41:39
news-image

தாய்லாந்து – மலேசிய கடற்பரப்பில் ரோஹிங்கியாக்களின்...

2025-11-10 10:05:23
news-image

ஜப்பானில் 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்...

2025-11-09 15:18:58
news-image

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி

2025-11-09 12:20:05
news-image

தெற்கு பிரேசிலில் சூறாவளி ;  06...

2025-11-09 11:32:30