எம்மில் பலரும் நாளாந்தம் பணி நிமித்தம் வெளியிடங்களுக்கு சென்று, பணிகளை நிறைவு செய்து, அதன் பிறகு இல்லம் திரும்புவோம். காலையில் எழுந்ததும் நீராடி, இறைவனை தொழுது, சத்தான உணவினை உண்டு, மனம் மற்றும் உடல் முழுவதும் நேர் நிலையான ஆற்றல்களை அதிகரித்துக் கொண்டு வீட்டிலிருந்து புறப்படுவோம். ஆனால் வீட்டை விட்டு வாசலில் இறங்கி வாகனங்களில் பயணிக்க தொடங்கும் போது உங்களின் நேர் நிலையான ஆற்றல் குறையத் தொடங்கி, காற்றில் கலந்திருக்கும் ஏராளமான எதிர்மறை ஆற்றல் எம்மை தாக்கி ஆக்கிரமிக்கும்.
நாம் அலுவலகம் / விற்பனை நிலையம்/ தொழிற்கூடம் / தொழிற்சாலை / ஆகியவற்றில் பணியாற்றும் போது உடன் பணியாற்றும் சக தொழிலாளர்களால்... அவர்களின் மறைமுகமான கண் திருஷ்டி எம் மீது விழுவதை எக்காரணம் கொண்டும் தவிர்க்க இயலாது. இதன் காரணமாக எம்முடைய ஆரா மற்றும் புற உடல் பகுதியில் படிந்திருக்கும் எதிர் நிலையான ஆற்றல்.. இல்லம் திரும்பியவுடன் வீடுகளுக்குள் பரவும் அல்லது பரவி மறைந்து விடும். இதனால் எம்முடைய இல்லத்தில் எதிர்மறை ஆற்றல் அல்லது எதிர்மறை சக்திகள் - புகலிடமாக புகுந்து எம்முடைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு தடையாக மாறும். இதனால்தான் எம்முடைய முன்னோர்கள் வீட்டிலிருந்து கிளம்பி மீண்டும் வீடு திரும்பும் போது குடும்பத் தலைவர்கள் மற்றும் வெளியில் சென்று வருவாய் ஈட்டுபவர்கள் தங்களை எப்போதும் நேர் நிலையான ஆற்றலால் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இதனை தொடர்ச்சியாக செய்ய தவறும் போது எம்முடைய வீடுகளில் எதிர்மறை ஆற்றல்களின் சக்தி அதிகரித்து மன ஆரோக்கியத்தை சீர்குலைத்து, தவறான முடிவுகளை மேற்கொள்ள வைத்து, சீரற்ற திசையில் பயணிக்க வைத்து, முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படும்.
இந்த தருணத்தில் எம்முடைய வீடுகளில் நிரந்தரமாக நேர் நிலையான ஆற்றல்கள் தொடர்ச்சியாக ... அலை அலையாக... பரவ வேண்டும் என்றால், சில எளிய வாழ்வியல் பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும். நாளாந்தம் காலை வேளைகளில் அல்லது மாலை வேளைகளில் குங்கிலியம் சாம்பிராணி எனும் நாட்டு மருந்து கடையில் விற்பனையாகும் பொருளை வாங்கி வந்து சாம்பிராணி புகை போட வேண்டும். இதனை உங்களுடைய வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் இருக்கும் நான்கு மூலை பகுதிகளிலும் காண்பிக்க வேண்டும். மேலும் இந்த தருணத்தில் 108 முறை காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மேலும் இந்த பரிகாரத்தை எப்போது.. எந்த கிழமையில் ...எந்த நாளில்... நீங்கள் தொடங்கினாலும் தொடர்ச்சியாக 21 நாட்கள் அதே வேளையில் அதாவது மாலை அல்லது காலை எந்த தருணம் உங்களுக்கு சவுகரியமானதோ... அந்த தருணத்தை தெரிவு செய்து தொடர்ச்சியாக 21 நாட்கள் இதனை செய்து வந்தால் உங்களது வீட்டில் இருக்கும் எதிர்மறையான ஆற்றல் மறைந்துவிடும். அதே தருணத்தில் நேர் நிலையான ஆற்றல் நிலையாக தங்கி, உங்கள் முன்னேற்றத்திற்குரிய சூட்சும சக்தி கிடைக்கும்.
மேலும் நீங்கள் எப்போதும் உங்களுடன் நேர்நிலையான ஆற்றலை வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்பினால்... பூஜை பொருட்கள் மற்றும் ஆன்மீக பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் சந்தைப்படுத்தப்பட்டிருக்கும் மகா மிருத்யுஞ்சய எந்திரம் எனும் ஆன்மீக பொருளை வாங்கி (அவை கழுத்தில் அணியும் வகையில் கிடைக்கிறது) அணிந்து கொள்ள வேண்டும். அணிய விருப்பமில்லை என்றால் .... அதனை உங்களுடைய பர்ஸ்ஸிலும் வைத்துக் கொள்ளலாம். இந்த எந்திரம் வலிமையாக செயல்பட்டு உங்களது ஆரா மற்றும் உடலில் பதியும் எதிர்மறை ஆற்றல்களை அழித்து, நீங்கள் எப்போதும் நேர் நிலையான சக்தியுடன் திகழ செய்யும்.
இதனை வாங்கி அணிந்து கொள்ள வைத்துக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் ... நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சிறிய அளவிலான படிகார கல் ஒன்றை வாங்கி, அதனை இரவு உறங்கும் போது உங்களது தலையணையின் கீழ் பகுதியில் வைத்துக் கொண்டு உறங்கவும். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அந்த தலையணையில் இருந்து படிகாரக் கல்லை எடுத்துக்கொண்டு, உங்கள் தலையை இருபத்தியோரு முறை சுற்றி அதனை அடுப்பில் போட்டு எரித்து விட வேண்டும். இதனை செய்யும்போது உங்களையும் அறியாமல் உங்கள் மீது படிந்துள்ள மற்றும் உங்களது வீடுகளில் பரவி உள்ள எதிர்மறை ஆற்றல் அழிந்துவிடும். இந்த வாழ்வியல் பரிகாரத்தை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது.
சிலருக்கு இத்தகைய வாழ்வியல் பரிகாரத்தை மேற்கொள்வதிலும் சங்கடங்களும், சிக்கல்களும் இருந்தால் இதனை விட எளிதான ஒரு வாழ்வியல் பரிகாரம் உள்ளது. ஹனுமான் சாலிசா எனும் மந்திரத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது அது தொடர்பான ஒடியோவை பதிவிறக்கம் செய்தோ வைத்துக் கொள்ளுங்கள். காலையிலிருந்து மாலை வேளைக்குள் நாளாந்தம் ஏழு முறை இந்த ஹனுமன் சாலிசா மந்திரத்தை ஒலிக்க விடுங்கள். மிக வலிமையான இந்த மந்திரம் ஒலிக்கும் போது உங்களுடைய வீடு/ அலுவலகம்/ தொழிற்சாலை என எங்கு எதிர்மறை ஆற்றல் இருந்தாலும், இந்த அனுமானின் வலிமை மிக்க மந்திரமான அனுமான் சாலிசாவை ஒலிக்க வைத்தால்... எதிர்மறை ஆற்றல் மறைந்து, நேர் நிலையான ஆற்றல் அதிகரித்து, உங்களின் எண்ணங்கள் வலிமை ஆகி.. செயல்களில் புதுமை ஏற்பட்டு, முன்னேற்றம் உறுதியாகும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM