கவனம் ஈர்க்கும் 'மெட்ராஸ்காரன் 'பட டீசர்

27 Jul, 2024 | 07:00 PM
image

மலையாளத்தின் முன்னணி நட்சத்திர நடிகரான ஷேன் நிஹாம் தமிழில் நாயகனாக அறிமுகமாகும் 'மெட்ராஸ்காரன் ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கேங்ஸ்டர் பின்னணியிலான இப்படத்தின் டீசர் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இலட்சக்கணக்கான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. 

'ரங்கோலி' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மெட்ராஸ்காரன்' எனும் திரைப்படத்தில் ஷேன் நிஹாம், கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன், சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் ஆர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ஜெகதீஷ் தயாரித்திருக்கிறார். 

தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் திரையுலக பிரபலங்கள் பங்கு பற்றி படக்குழுவினருக்கு  வாழ்த்து தெரிவித்தனர். 

படத்தை பற்றி நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசுகையில், '' தயாரிப்பாளர் ஜெகதீஷ் எம்முடைய இனிய நண்பர். நெருங்கிய நண்பர். அவரிடம் இயக்குநர் வாலியை பற்றி சொன்னேன். அதன் பிறகு இருவரும் சந்தித்தனர். இந்தப் படத்தின் கதையை முதல் பகுதி கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக படத்தின் பணிகளை தொடங்கி விட்டார். இயக்குநர் மீது அவ்வளவு நம்பிக்கை. அதன் பிறகு இந்த திரைப்படத்தில் ஷேன் நிகாம், நிஹாரிகா என பலரும் இணைந்தனர். இந்தப் படம் பிரம்மாண்டமான பட்ஜட்டில் தரமான படைப்பாக உருவாகி இருக்கிறது.'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் அர்ஜுன் பிரபாகரன் நடிக்கும் 'பேட்டில்'...

2026-03-13 17:09:24
news-image

இயக்குநர் சேரன் வெளியிட்ட நடிகர் மதுசூதனன்...

2026-03-13 17:09:12
news-image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட 'திருபாவை'...

2026-03-13 16:51:37
news-image

மீண்டும் அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பளிக்கும் சிவகார்த்திகேயன்

2026-03-12 17:30:38
news-image

ஜெய் நடிக்கும் 'சட்டென்று மாறுது வானிலை'...

2026-03-12 16:37:11
news-image

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ஹேப்பி...

2026-03-11 14:51:50
news-image

முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய...

2026-03-11 14:47:53
news-image

நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் புதிய...

2026-03-11 14:38:41
news-image

ஹாரர் படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது...

2026-03-10 14:35:51
news-image

'தலைவாசல்' விஜய் நடிக்கும் 'ஆர் ஆர்...

2026-03-10 14:27:59
news-image

மம்முட்டி- மோகன்லால் நடிக்கும் 'பேட்ரியாட் '...

2026-03-09 16:17:33
news-image

காதல் ரீசெட் ரிப்பீட் - திரைப்பட...

2026-03-09 16:14:25