(இராஜதுரை ஹஷான்)
இடைக்கால ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாடு நிர்வகிக்கப்படும் போது பதில் பொலிஸ்மா அதிபரின் ஒத்துழைப்புடன் ஏன் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது.அரசியலமைப்பு குறித்து சபாநாயகரால் வியாக்கியானம் வழங்க முடியாது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
உயர்நீதிமன்றத்தால் பணி இடைநிறுத்தப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட போது அரசியலமைப்பு பேரவை செயற்பட்ட விதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுஇ இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க போவதில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் செயற்படுவதை பிரதமர் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை ஊடாக விளங்கிக்கொள்ள முடிகிறது.
பாராளுமன்றத்தின் ஒரு பகுதியாகவே அரசியலமைப்பு பேரவை செயற்படுகிறது. ஆகவே பாராளுமன்றத்தின் செயற்பாட்டை அல்லது தீர்மானத்தை நீதிமன்றங்கள் அல்லது சட்ட அதிகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் சவாலுக்குட்படுத்த முடியாது என்ற தர்க்கத்தை அரசாங்கம் முன்வைக்கிறது.இதற்கமைய தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக தொடர்ந்து செயற்படுவார் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.
அரசியலமைப்பு பேரவை பாராளுமன்றத்தின் ஒரு பகுதியல்ல என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.பாராளுமன்றத்தின் தெரிவுக்குழு மற்றும் குழுக்களை போன்று அரசியலமைப்பு பேரவை செயற்படுவதில்லை.அரசியலமைப்பு ஊடாகவே அரசியலமைப்பு பேரவைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.அத்துடன் நிறைவேற்றுத்துறையின் அங்கமாக அரசியலமைப்பு பேரவை செயற்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது.
பொலிஸ்மா அதிபரான தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்ட விதத்தில் சிக்கல்கள் காணப்படுவதால் தான் அது தொடர்பில் விசாரணை செய்ய உயர்நிதிமன்றம் தீர்மானித்துள்ளது.இதற்காகவே பொலிஸ்மா அதிபருக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அரசியலமைப்புக்கு அமையவே பொலிஸ்மா அதிரபர் நியமிக்கப்பட்டார் என்று சபாநாயகர் வியாக்கியானம் வழங்க முடியாது.உயர்நீதிமன்றமே வியாக்கியானம் வழங்க வேண்டும்.
பொலிஸ்மா அதிபருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவால் ஜனாதிபதித் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஒருதரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.பொலிஸ்மா அதிபருக்கு இடைக்காலத் தடையுத்தரவை விதித்த உயர்நீதிமன்றம் அரசியலமைப்பின் பிரகாரம் தகைமையானவரை பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபரை தேர்தல் காலத்தில் நியமிக்க முடியாது என்று அரசியல் தரப்பில் குறிப்பிடப்படுகிறது.இடைக்கால ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க நாட்டை நிர்வகிக்கும் போது பதில் பொலிஸ்மா அதிபரை நியமித்து தேர்தல் பணிகளுக்கு ஏன் ஒத்துழைப்பை பெற முடியாது.உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM