சாதனை படைத்து வரும் அருள் நிதியின் 'டிமான்டி காலனி 2' பட முன்னோட்டம்

27 Jul, 2024 | 03:59 PM
image

அருள்நிதி நடிப்பில் தயாரான 'டிமான்டி காலனி 2' படத்தின் முன்னோட்டம் வெளியாகி குறுகிய கால அவகாசத்திற்குள் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'டிமான்டி காலனி 2' எனும் திரைப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன், சர்ஜனோ காலித்  இவர்களுடன் ஆன்ட்டி ஜாஸ்கிலைனன் எனும் ஹொலிவுட் நடிகரும் நடித்திருக்கிறார்.‌

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார்.

முழு நீள ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பாபி பாலச்சந்திரன்- விஜயா சுப்பிரமணியன்- ஆர். சி. ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் கிறாபிக்ஸ் காட்சிகள் அசத்தலாக இருப்பதுடன் பார்வையாளர்களை வெகுவாக பயமுறுத்துவதால் ... இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெண்களின் பாரம்பரிய ஆடையை பற்றி பேசும்...

2024-09-17 13:59:28
news-image

ஜனநாயகத்திற்கான ஜோதியை ஏந்தி வரும் விஜய்

2024-09-17 13:35:40
news-image

அரசியலில் அறிமுகமாகும் தளபதி விஜய்க்கு குட்டிக்கதை...

2024-09-17 11:12:46
news-image

'கார்த்தி 29' அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

2024-09-17 10:55:46
news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13
news-image

பிரபு - வெற்றி கூட்டணி அமைத்து...

2024-09-14 10:59:08
news-image

இயக்குநர் ராஜு முருகனுடன் இணையும் கௌதம்...

2024-09-14 10:53:20
news-image

சீனு ராமசாமியின் 'கோழி பண்ணை செல்லத்துரை'...

2024-09-14 06:46:07
news-image

பாடகர் மனோவின் இரு மகன்களை கைதுசெய்ய...

2024-09-13 12:10:15