திலகரத்ன டில்ஷானை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுமாறு குடிபோதையில் இருந்த பார்வையாளர் ஒருவர் திட்டியுள்ளார்.

இச் சம்பவம் நியூசிலாந்து அணிக்கெதிரான  2 ஆவது இருபதுக்கு - 20 போட்டியின் போது இடம்பெற்றுள்ளது.

போட்டி  முடிவடைந்ததும் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய டில்ஷான் மற்றும் அணியினரை நோக்கி பார்வையாளர் கலரியில் இருந்த குறித்த நபர் டில்ஷானை நோக்கி “ டில்ஷான் நீர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் என்று தெரிவித்துள்ளார். 

இதற்கு நகைச்சுவையாக பதிலளித்த டில்ஷான் ஏன் நீர் வந்து கிரிக்கெட் விளையாடவா ? என்று கேட்டுள்ளார்.

இந்நிலையில் வாக்குவாதம் காரசாரமாக தன்னை சுதாகரித்துக் கொண்ட டில்ஷான் மைதானத்தில் நின்ற அதிகாரியிடம் முறையிட்டு விட்டு திட்டியவாறு வீரர்கள் அறையை நோக்கிச் சென்றுள்ளார்.