பந்துவீச்சில் ரேணுகா, ராதா அபாரம்; பங்களாதேஷை 10 விக்கெட்களால் வென்று இறுதிக்குள் நுழைந்தது இந்தியா

Published By: Vishnu

26 Jul, 2024 | 10:01 PM
image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26) பிற்பகல் நடைபெற்ற மகளிர் ரி20 ஆசிய கிண்ணத்திற்கான முதலாவது அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷை 10 விக்கெட்களால் வெற்றிகொண்ட நடப்பு சம்பியன் இந்தியா முதல் அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங், சுழல்பந்துவீச்சாளர் ராதா யாதவ் ஆகிய இருவரும் தங்களிடையே 6 விக்கெட்களைப் பகிர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு அடிகோலினர்.

அவர்கள் இருவரின் பந்துவீச்சுகளின் உதவியுடன் பங்களாதேஷை குறைந்த எண்ணிக்கைக்கு கட்டுப்படுத்திய இந்தியா, தொடர்ச்சியாக துடுப்பாட்டத்தில் அசத்தி வரும் ஆரம்ப வீராங்கனைகளின் உதவியுடன் வெற்றி இலக்கை இலகுவாக கடந்தது.

இந்த வெற்றியுடன் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் சகல இறுதிப் போட்டிகளிலும் விளையாடுவதை இந்தியா உறுதிசெய்துகொண்டது.

தற்போது நடைபெற்றுவரும் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியை ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியா எதிர்தாடும்.

முதலாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 80 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

முதல் 3 விக்கெட்களை பவர் ப்ளேக்குள் ரேணுகா சிங் வீழ்த்தியதால் பங்களாதேஷ் திக்குமுக்காடிப்போனது.

அணித் தலைவி நிகார் சுல்தான் மிகவும் நிதானத்துடனும் பொறுமையுடனும் துடுப்பெடுத்தாடி 32 ஓட்டங்களைப் பெற்றார். ஷொர்ணா அக்தர் 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ரேணுகா சிங் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராதா யாதவ் ஒரு ஓட்டமற்ற  ஓவர் உட்பட 4 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 83 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியிட்டியது.

ஸ்ம்ரித்தி மந்தனா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 39 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 55 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். மறுபக்கத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஷபாலி வர்மா ஆட்டம் இழக்காமல் 26 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆட்டநாயகி: ரேணுகா சிங்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னேறி வரும் வீரருக்கான ஐசிசி விருதை ...

2025-02-18 16:06:10
news-image

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யும் இலங்கை...

2025-02-18 12:14:50
news-image

ஆகிய கனிஷ்ட குறிபார்த்து சுடுதலில் இலங்கைக்கு...

2025-02-17 18:05:27
news-image

லாகூர் கோட்டையில் பச்சை மின் விளக்குகளுடன்...

2025-02-17 18:02:20
news-image

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் வட ...

2025-02-17 15:23:07
news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37