பாகிஸ்தானின் தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் (NAB) மற்றும் இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) ஆகியவற்றுக்கு இடையே குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (26) கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் உள்ள இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) அலுவலகத்தில் நடைபெற்றது.
பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பாஹீம் உல் அஸீஸ் பாகிஸ்தானின் தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்தின் சார்பாக கைசாத்திட்டார். பொது இயக்குநர் W.K.D. விஜேரத்ன இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சார்பாக கைச்சாத்திட்டார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஊழல் மற்றும் பண மோசடிக்கு எதிரான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளின் நிறுவனங்களுக்கிடையே திறன் மற்றும் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்துகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM