கோணேஸ்வரத்தையும் அங்குள்ள தமிழர்களின் பாரம்பரிய உடைமைகளையும் அனைத்து தமிழர்களும் பாதுகாக்கவேண்டும் - கலாநிதி ஆறுதிருமுருகன்

26 Jul, 2024 | 05:53 PM
image

(எம்.நியூட்டன்)

திருகோணேஸ்வர திருக்கோவிலையும் அங்குள்ள தமிழர்களின் பாரம்பரியமான  உடைமைகளையும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும் என கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திருகோணமலை கோணேஸ்வரர் சமய அறிவுப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கோணேஸ்வரர் ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் தனது உரையில் மேலும் கூறுகையில்,

திருகோணமலை திருக்கோணஸ்வரம் பாடசாலை மாணவர்களிடையே போட்டிகளை நடாத்தி பரிசு வழங்குவதை கண்டு நான் ஆனந்தமடைகின்றேன். பாடல் பெற்ற ஸ்தலமான திருக்கோணேஸ்வரம் பற்றிய அறிவை மாணவர்களுக்கு பரப்பும் விதமாக பரடைஸ் மற்றும் சமய நிறுவனங்கள் இணைந்து நடாத்திய இந்த சமய அறிவுப் போட்டியில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பற்றியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அழைத்து கௌரவித்தமைக்கு நன்றி கூறுகின்றேன். இவ்வளவு பெருந்தொகையான மாணவர்களை அழைத்து பரிசில்கள் வழங்குவது என்பது பாராட்டுக்குரிய விடயம். 

திருகோணமலை மாவட்டத்தில் சைவ சமயம் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில் மாணவர்களிடையே சைவ அறிவை வளர்ப்பதற்காக எடுத்த முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது. 

எங்கள் வரலாறு அடுத்த தலைமுறைக்கு தெரியாமல் போனால் அதை விட ஆபத்தானது ஒன்றும் இல்லை. இன்று திருகோணமலையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு காரணம் எங்கள் ஆவணங்களை சரியாக பேணாமையே ஆகும். 

திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயம் இன்று சரியான வளர்ச்சிப் பாதைக்கு செல்ல முடியாமல் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்கிறது. 

தொல்லியல் திணைக்களத்தாலும் வேறு சில அமைப்புக்களாலும் கோணேஸ்வரர் ஆலயத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்தும் இடையூறுகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலை  மாறவேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். 

திருக்கோணேஸ்வரம் என்பது இலங்கை தமிழர்களின் தலையாய சொத்து. அதனை சீராக பராமரிக்கின்றபோதுதான் தமிழர் வாழ்வு சிறக்கும். 

எனவே, திருக்கோணேஸ்வரர் திருக்கோவிலையும் அங்குள்ள தமிழர்களின்  பாரம்பரியமான உடைமைகளையும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து பாதுகாக்கவேண்டும்  என்று இந்த பரிசளிப்பு நாளில் வேண்டுவதுடன் மாணவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோருக்கு வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீரிமலை நகுலேச்சரத்தில் கொடியேற்றம்!

2025-02-13 18:24:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23
news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22
news-image

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட...

2025-02-11 16:44:02
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

2025-02-11 16:02:04
news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51