உலகின் மிகச்சிறந்த KONKA வீட்டு மின் உபகரணங்கள் FLiCO உடன் இணைந்து மீண்டும் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றது.
உயர்தர வீட்டு மின் உபகரணங்களை உற்பத்தி செய்யும் உலகின் முன்னணி சர்வதேச நிறுவனங்களில் KONKA நிறுவனமும் ஒன்றாகும்.
KONKA வர்த்தக நாமத்தின் கீழ் தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் பல மின்சாதன பொருட்கள் FLiCO வலையமைப்பின் மூலம் இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன.
KONKA நிறுவனம் இலங்கையில் தனது தயாரிப்புக்களை விநியோகிப்பவராக தேர்ந்தெடுத்துள்ள Future Life Holdings நிறுவனத்தின் துணை நிறுவனமான, நாட்டின் தனித்துவமான சேவைகளை வழங்கும், FLiCO உடனான செய்தியாளர் சந்திப்பை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் 25 ஆம் திகதி வியாழக்கிழமை முன்னெடுத்திருந்தது.
Future Life Investments எனும் பெயர் கொண்டு நுண்கடன் துறையில் தடம்பதித்த இந் நிறுவனம், கடந்த 8 ஆண்டு காலத்திற்குள் பல துறைகளிலும் வளர்ச்சி பெற்று, தற்போது Future Life Holdings ஆக பல துணை நிறுவனங்களுக்கு தாய் நிறுவனமாக செயற்பட்டு வருகின்றது. ஹோட்டல்கள், பயணச் சேவைகள், பல்பொருள் அங்காடிகள், விவசாயத் தொழில் சார்ந்த சேவைகள், தககவல் தொழில்நுட்பச் சேவைகள், விளம்பரம் மற்றும் ஊடகச் சேவைகள், விமான பயணச் சேவைகள் மற்றும் வீட்டு மின் உபகரண பொருட்களை விநியோகித்தல் மற்றும் அதன் காட்சியறைகள் என பலதரப்பட்ட துறைகளில் சிறந்த சேவைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.
FLiCO எனும் பெயரில் வீட்டு மின்சாதன பொருட்கள் அடங்கிய காட்சியறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளின் ஓர் பெரிய வலையமைப்பாக இது ஆரம்பித்து வைக்கப்பட்டது FLiCO நிறுவனத்தின் வர்த்தக நாம தூதுவராக சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர் மஹீஷ் தீக்ஷன இணைந்து கொண்டதுடன் அண்மையில் நடந்து முடிந்த எல்.பி.எல். 2024 கிரிக்கெட் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்ட Galle Marvels அணியின் இணை அனுசரணையாளராக, குழு உணர்விலும் , வெற்றியை நோக்கிய பயணத்திலும் , நம்பகத்தன்மையிலும் முன்னின்று செயற்பட்டு வெற்றி வழிக்கு ஊக்குவிப்பை வழங்கியதுடன், சிறந்த சந்தைப்படுத்தல் உத்தியாக இதனை பயன்படுத்திக் கொண்டதுடன் FLiCO நிறுவனத்தின் தூரநோக்கு கொண்ட செயற்பாடாகும்.
KONKA வர்த்தக நாமம் காட்சி அறைகளாக, FLiCO சேவை வலையமைப்பின் ஊடாக இதன் ஆரம்பக் கிளைகள் மகரகம மற்றும் பெலவத்தை ஆகிய இரு நகரங்களை மையமாகக் கொண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி காலை திறந்து வைக்கப்பட்டன.
KONKA நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, நிறுவனத்தின் பிராந்தியப் பணிப்பாளர் Reedlu மற்றும் வெளிநாட்டு வர்த்தக அபிவிருத்தியின் சிரேஷ்ட முகாமையாளர் திருமதி Fiona you ஆகியோரும், Future Life Holdings நிறுவனத்தின் பணிப்பாளர்களான திரு தனுஷ்க உடுகம, திரு. சஞ்சய் ஜயவீர மற்றும் திரு. கசுன் பெரேரா மற்றும் FLiCO நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதியுயர் தொழில்நுட்பத்துடன் கூடிய, தரமான , பெறுமதிக்கேற்ற சிறந்த பொருட்களை வழங்கும் KONKA உள்ளிட்ட மேலும் பல தயாரிப்புக்களை பயன்படுத்தி மகிழ இந்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு இது மிகப்பெரும் வாய்ப்பாக அமைகின்றது.
www.flico.lk எனும் இணையத்தளம் , FLICO பேஸ்புக் பக்கம் மற்றும் FLICO சமூக வலைத்தளங்களின் ஊடாக இது தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
( படங்கள் : ஜே. சுஜீவகுமார் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM