(எம்.ஆர்.எம்.வசீம்இ இராஜதுரை ஹஷான்)
பொலிஸ்மா அதிபர் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கும் இடைக்கால தடை உத்தரவு தொடர்பில் நாங்கள் எடுக்கும் தீர்மானத்தினால் எங்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் அதன் சாதக பாதகங்களை அனுபவிக்க வேண்டிவரும். அரச அதிகாரிகள் அரசியல் வாதிகளை நம்பாமல் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்பட வேண்டும். ஜனாதிபதி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து அரசியலமைப்புக்குட்டு செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் பிரதமரின் விசேட உரைக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
உயர் நீதிமன்றத்தின் 3பேர்கொண்ட நீதியரசர்கள் குழு பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் இடைக்கால தடை உத்தரவொன்றை வழங்கி இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக எடுக்கும் தீர்மானத்தினால் எங்கள் அனைவருக்கும் அரச அதிகாரிகளுக்கும் இதன் சாதக பாதங்களை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும். நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயற்பட்டால் பாரிய நெருக்கடிக்குள் விழுவோம். குறிப்பாக அரச அதிகாரிகள் சட்டத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும். அரசியல்வாதிகள் பைத்தியம் விளையாடிவிட்டு செல்வார்கள். அதற்கான பிரதிபலனை அவர்கள் அனுபவிப்பார்கள். ஆனால் அரச அதிகாரிகள் இதில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.
உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கும் இடைக்கால தடை உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது என எவ்வாறு தெரிவிக்க முடியும்? ஜனாதிபதி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து அரசியலமைப்புக்குட்பட்டு செற்பட வேண்டும்.
அத்துடன் உயர் நீதிமன்றத்தால் இடைக்கால தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் சிவில் உடையில் சென்று பொலிஸை நிர்வகிக்கிறார். இது எவ்வாறு முடியும். இது முற்றாக பிழையான நடவடிக்கை. அதேநேரம் பிரதமர் அரசியலமைப்பை மீறி செயற்படுவதையிட்டு வெட்கப்படடுகிறேன்.
பொலிஸ்மா அதிபரை நியமித்த முறை அரசியலமைப்புக்கு முரண் என்கதாலே அவர் பொலிஸ்மா அதிபராக செயற்படுவதை உயர் நீதிமன்றம் நிறுத்தி இருக்கிறது. இந்த பிரச்சினையில் இருந்து ஜனாதிபதி தப்பிக்க முடியாது.அவர் தற்போதும் நாடடின் ஜனாதிபதி. அவர் ஜனாதிபதி வேட்பாளர் என்பதற்காக அவரின் பொறுப்புக்களை நிறுத்த முடியாது. பொலிஸ்மா அதிபர் ஒருவர் இல்லாத சந்தர்ப்பத்தில் பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை பெயரிடும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. ஜனாதிபதிக்கு பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியாது என்றால் அவர் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவேண்டும். அப்போது பதில் ஜனாதிபதி அதனை செய்வார் என்றார். என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM