பதில் பொலிஸ்மா அதிபர் நியமனத்துக்கு தீர்வுகாணும் பொறுப்பு அரசியலமைப்பு பேரவைக்கே உரியது - சுசில்

26 Jul, 2024 | 04:27 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக  நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பொறுப்பு அரசியலமைப்பு பேரவைக்கே காணப்படுகிறது. அதனால் இந்த பிரச்சினைக்கான தீர்வை  அரசியலமைப்பு பேரவையே எடுக்க வேண்டும் எனச் சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தடையுத்தரவு சம்பந்தமாகப் பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) தெளிவுபடுத்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

சபை முதல்வர் என்பவர் சபை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர். அந்த செயற்பாடுகளையே நான் செய்கின்றேன். அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பில் நான் தெளிவுபடுத்தியுள்ளேன் எனினும் அரசியலமைப்பு பேரவையின் தலைவர் சபாநாயகரே.

அரசியலமைப்பின் உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு ஜனாதிபதி பெயர் குறித்து அனுப்புவாரானால் அதனை உறுதிப்படுத்துவது அரசியலமைப்பு பேரவையே.

பொலிஸ் மா அதிபரின் சேவை தொடர்பில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானால் பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக உள்ளதா? அந்தப் பதவியை இடைநிறுத்துவதற்கு உச்ச நீதிமன்றத்தினால் முடியும். அரசியலமைப்பின் 126 வது சரத்தின் படி அது சரி. சட்டத்தரணி என்ற வகையில் நானும் அதற்கு இணங்குகிறேன். பதவியை வெற்றிடமாக்காமல் பதவி நிறுத்தப்பட்டே உள்ளது. பதவி ஒன்று வெற்றிடமாக இல்லாவிட்டால் அதற்கான பதில் நியமனம் வழங்குவது எவ்வாறு?

அவ்வாறென்றால் அரசியலமைப்பு பேரவை  அந்த பிரச்சினையை மீண்டும் சபாநாயகருக்கு வழங்க வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சர் ஒருவர் வெளிநாட்டுக்குச் சென்றால் அவருக்குப் பதிலாகப் பதில் அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும். அது தொடர்பில் அரசியலமைப்பில் எதுவும் கிடையாது.எனினும் இந்த நியமனம் தொடர்பில் அரசியலமைப்பில் 7(ஆ)  சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது இந்த நாட்டின் முக்கியமான சட்டமாகும். அதனை ஒருபோதும் மீற முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09