(நா.தனுஜா)
பதில் பொலிஸ்மா அதிபரை நியமிப்பதிலிருந்து தான் விலகியிருப்பதாக ஜனாதிபதி அறிவித்திருப்பதானது, அவரால் மாத்திரம் நிறைவேற்றப்படக்கூடிய கடமைகளை அவர் புறக்கணித்துச் செயற்படுவதையே காண்பிக்கிறது. அவரால் அவருக்குரிய கடமைகளை ஈடேற்ற முடியாவிடின், அரசியலமைப்பின் பிரகாரம் தற்காலிகமாகப் பதவி விலகி, அக்கடமைகளை நிறைவேற்றுவதற்கு பிரதமருக்கு இடமளிக்கவேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் பதில் பொலிஸ்மா அதிபரை நியமித்தால் தனக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படுமென சட்ட ஆலோசனை கிடைத்திருப்பதாகவும், எனவே இதிலிருந்து தான் விலகியிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்துக் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கான பக்குவமோ, நேர்மைத்தன்மையோ அற்ற ஜனாதிபதியினால் அதனை மீறுவதற்கு மேற்கொள்ளப்படும் மற்றுமொரு மிகமோசமான முயற்சியே இதுவென சுட்டிக்காட்டியுள்ளார்.
'அவ்வாறெனில் மிகமுக்கிய பதவியை வகிக்கும் ஒருவர் பதவி விலகினால் அல்லது உயிரிழந்தால், தேர்தல் முடிவடையும் வரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அப்பதவிக்கு யாரையும் நியமிக்கமாட்டாரா? தேர்தலில் தாக்கம் செலுத்தும் என்பதால் காணிகளையும், ஏனைய நலன்களையும் மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு ஜனாதிபதி நாடளாவிய ரீதியில் பயணங்களை மேற்கொள்ளமாட்டாரா?' எனவும் கேள்வி எழுப்பியுள்ள சாலிய பீரிஸ், இது ஜனாதிபதி அவருக்குரிய கடமைகளை நிறைவேற்றாமல் புறக்கணித்து செயற்படுவதையே காண்பிக்கிறது என விசனம் வெளியிட்டுள்ளார்.
மேலும் 'அரசியலமைப்பின் பிரகாரம் வேறு யாராலும் ஈடேற்றமுடியாத சில முக்கிய அதிகாரங்கள், கடமைகள் ஜனாதிபதிக்கு உண்டு. அவ்வாறிருக்கையில் ஜனாதிபதியினால் அக்கடமைகளை நிறைவேற்றமுடியாதெனில், அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டுள்ளவாறு அவர் தற்காலிகமாகப் பதவி விலகி, அக்கடமைகளை பிரதமர் நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்கவேண்டும்' எனவும் சாலிய பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM