முல்லைத்தீவு, கரியல்வயல், சுண்டிக்குளம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றைய தினம் (26) முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் அப்பகுதியில் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் அந்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
சுண்டிக்குளம் தேசிய பூங்காவுக்குள் சென்றமை, தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை, காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு, 7.12.2023 அன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டு, 02.05.2024 என்ற திகதிக்கு தவணையிடப்பட்டிருந்தது.
அந்த வழக்கே இன்று விசாரணைக்காக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கினை மீள்பரிசீலனை செய்து வழக்குகள் தொடர்பாக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டியிருப்பின் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றத்தினால் வழக்கு தொடுனர் தரப்புக்கு கடந்த தவணையில் அறிவுறுத்தப்பட்டு, அவ்வழக்கு மூன்றாக பிரித்து ஜூலை மாதம் 19, 25, 26 ஆகிய திகதிகளுக்கு தவணையிடப்பட்டிருந்தது.
அதற்கமைய கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதிக்கும், இன்றைய தினம் (25) இடம்பெற்ற வழக்கு எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதிக்கும் தவணையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளைய தினம் (26) மற்றுமொரு பிரிவு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM