யாழில் வாள் முனையில் மோட்டார் சைக்கிள் கொள்ளை

Published By: Digital Desk 7

26 Jul, 2024 | 12:53 PM
image

யாழ்ப்பாணத்தில் வாள் முனையில் மோட்டார் சைக்கிளில் வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கோண்டாவில் வீதியில் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை (24) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, கோண்டாவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக காலை நொண்டியவாறு இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளை வழி மறித்துள்ளார். 

அதனால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்திய வேளை, நொண்டிக் கொண்டிருந்த நபர் தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த வாளினை எடுத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை வெட்ட முயன்றுள்ளார். 

அதற்கு இளைஞன் எதிர்ப்பு காண்பிக்க , வீதியின் ஓரத்தில் மறைந்திருந்த மற்றுமொரு இளைஞனும் வாளுடன் வெளியே வந்து இளைஞனை வெட்ட முயன்ற வேளை இளைஞன் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். 

அதனை அடுத்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்ட தாக்குதலாளிகள் இருவரும் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை வரும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை -...

2024-09-15 19:08:09
news-image

ரணிலுக்கு அளிக்கப்படும் வாக்குகள் அனுரவையே பலப்படுத்தும்...

2024-09-15 18:53:23
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4...

2024-09-15 18:16:57
news-image

யுக்திய நடவடிக்கை : போதைப்பொருள் குற்றம்...

2024-09-15 18:44:46
news-image

மினுவாங்கொடையில் பஸ் மோதி பாதசாரி உயிரிழப்பு

2024-09-15 19:31:03
news-image

நல்லடக்கமா, எரிப்பா என்ற பிரச்சினை எழுந்தபோது...

2024-09-15 18:42:44
news-image

வடகிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை...

2024-09-15 17:32:34
news-image

களுத்துறையில் திருடப்பட்ட வாகனங்களுடன் நால்வர் கைது

2024-09-15 19:27:09
news-image

மீனவர்களின் தேவை கருதி நங்கூரமிடக்கூடிய நிலப்பிரதேசத்தை...

2024-09-15 19:25:52
news-image

இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்திலிருந்து முழுமையாக...

2024-09-15 17:08:26
news-image

முள்ளியவளையில் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

2024-09-15 19:23:47
news-image

முறையான இலவச சுகாதார சேவைக்காக ஐக்கிய...

2024-09-15 17:17:38